ஒடிசா கோர ரயில் விபத்து: ஆய்வு செய்த பிரதமர் மோடி.. அடுத்ததாக மருத்துவமனைக்கு விரைவு

By Raghupati RFirst Published Jun 3, 2023, 5:11 PM IST
Highlights

விபத்து நிகழ்ந்த இடமான பாலசோர் பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர்.

900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் அதுல் கர்வால் கூறுகையில், "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது இது மிகவும் மோசமான விபத்தாகும். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியிருக்கிறது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன" என்று கூறினார். கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-வது மிகப் பெரிய விபத்து என்று கூறப்படுகிறது. மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

ஒடிசா ரயில் விபத்து நடந்த பாலசோர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். pic.twitter.com/371UprO8RG

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

ரயில் விபத்துக்குள்ளான பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் பகுதியில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.

இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

click me!