இன்று உலகம் எதிர்கொண்டிருக்கும் போர் மற்றும் அமைதியின்மைக்கான தீர்வை புத்தர் அன்றே காட்டிவிட்டார் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் உலகளாவிய புத்தமத மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, கௌதம புத்தரின் உன்னத போதனைகள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற மக்களைப் பாதித்துள்ளன என்று என்றுதெரிவித்துள்ளார்.
முதலாவது உலகளாவிய புத்தமத மாநாடு தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, "இந்தியா உலகத்துக்கு புத்தரைக் கொடுத்திருக்கிறது. யுத்தத்தை அல்ல. இதை நான் ஐ.நா. சபையில் பெருமிதத்துடன் கூறினேன்" என்றார்.
புத்தர் தனிமனிதனுக்கு அப்பாற்பட்ட புரிதல் என்றும், புத்தர் வடிவத்திற்கு அப்பாற்பட்ட சிந்தனை என்றும் கூறினார். வெற்றி, தோல்விகள், சண்டைகள், போர்கள் போன்றவற்றை நாம் துறந்தால் மட்டுமே நாம் மகிழ்ச்சியைத் தழுவ முடியும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இவற்றைக் கடக்கும் வழியை புத்தபெருமான் போதித்துள்ளார் எனக் குறிப்பிட்ட பிரதமர், பகையை பகையால் அழிக்க முடியாது, அது அன்பால்தான் முடியும். உண்மையான மகிழ்ச்சி அமைதியில்தான் இருக்கிறது. அமைதியுடன் சேர்ந்து வாழ்வதில்தான் மகிழ்ச்சி உள்ளது எனவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சூரத் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புத்தபெருமானின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, உலக நலனுக்காக இந்தியா புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். புத்த பகவானின் விழுமியங்களை தமது அரசாங்கம் தொடர்ச்சியாக பரப்பி வருவதாக தெரிவித்த அவர், இந்த அமிர்த காலத்தில், இந்தியா பல விஷயங்களில் புதிய முயற்சிகளை எடுத்துள்ளது என்றும், இதற்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தவர் புத்தர் என்றும் எடுத்துரைத்தார்.
The Global Buddhist Summit is being held at a time when India is celebrating 75 years of her independence, when India is celebrating the 'Amrit Mahotsav'.
- PM pic.twitter.com/y7ltoia0q6
இந்தியா புத்தரை உலகிற்கு அளித்துள்ளது, போரை அல்ல என்ற பிரதமர், இன்று உலகம் அனுபவித்து வரும் யுத்தம் மற்றும் அமைதியின்மைக்கு புத்தர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்வை வழங்கிவிட்டார். அதுவே புத்தரின் எதிர்காலத்திற்கான வழி எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா 'அமிர்த மஹோத்சவ்' விழாவைக் கொண்டாடும் நேரத்தில், இந்த மாநாடு நடைபெறுவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர், மோடி, "புத்தரின் போதனைகள் கோட்பாடு, நடைமுறை மற்றும் உணர்தல் ஆகியவற்றின் பாதையை உள்ளடக்கியது; புத்தர் கூறிய அதே பாதையில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா பெரிய அளவில் முன்னேறி வருகிறது." என்று தெரிவித்தார்.
Karnataka Elections 2023: இவர்தான் உங்க நட்சத்திர தலைவரா? காங்கிரஸை விளாசும் பாஜக