அபுதாபி இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி: ஆரத்தி வழிபாடு!

By Manikanda Prabu  |  First Published Feb 14, 2024, 7:30 PM IST

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து வழிபாடு செய்தார்


பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று பிற்பகலில் அபுதாபி சென்ற அவர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் ‘அஹ்லான் மோடி’ எனும் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

இதையடுத்து, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து வழிபாடு செய்தார். ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே அபு முரேகாவில் சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா (பிஏபிஎஸ்) அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அபுதாபி  சுவாமி நாராயண் கோயில் சென்ற பிரதமரை புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதையடுத்து, கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி, கடவுள் சுவாமி நாராயண் மீது மலர் தூவி வழிபாடு செய்தார். அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள முதல் இந்து கோயிலுக்கு கங்கை மற்றும் யமுனை நதியின் நீரை பிரதமர் மோடி வழங்கினார். மேலும், கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கோயிலின் மாதிரியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

ஊழலற்ற ஆட்சி உலகிற்கு தேவை: துபாயில் பிரதமர் மோடி பேச்சு!

தொடர்ந்து, சுவாமி நாராயண் கோயிலில் நடைபெற்ற பிரார்த்தனை, சடங்குகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஆரத்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அப்போது, உலகம் முழுவதும் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா (பிஏபிஎஸ் - BAPS) அமைப்பால் பராமரிக்கப்பட்டு வரும் 1200 கோயில்களிலும் ஆரத்தி பூஜை நடைபெற்றது.

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபி அருகே அபு முரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்ட இந்து கோயில் (சுவாமி நாராயண் கோயில்) கட்டப்பட்டுள்ளது. கடந்த 2018 பிப்ரவரியில் கோயில் கட்டுமானப் பணியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து கோயில்களை நிறுவி பராமரித்து வரும் போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா (பிஏபிஎஸ் - BAPS) அமைப்பு, அபுதாபி கோயிலையும் கட்டி பராமரித்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் தங்களது வழிபாட்டுக்காக அங்கு இந்து கோயில் கட்டப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக அரசிடம் முன்வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, கோயில் கட்டுவதற்கான இடத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக அளித்தார்.

அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி!

அபுதாபியிலிருந்து 30 நிமிடம் மற்றும் துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள சுவாமி நாராயணன் கோயில், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகப் பெரிய இந்து மத வழிபாட்டு தலமாகும். இந்தக் கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. இக்கோயில் மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது

click me!