இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சுக்குள் இரும்பு போல்ட்! பெண் பயணி அதிர்ச்சி!

By SG Balan  |  First Published Feb 14, 2024, 3:54 PM IST

இண்டிகோ விமானத்தில் பெண் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சுக்குள் இரும்பு போல்ட் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு சென்ற பெண் ஒருவர், பயணத்தின்போது தனக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் போல்ட் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

வணிக நிமித்தமாக இண்டிகோ விமானத்தில் சென்னைக்குச் சென்ற அந்தப் பெண் இதுபற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து இருக்கிறார். விமானத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திலும் இதைப்பற்றிப் புகார் கொடுத்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

பிப்ரவரி 1ஆம் தேதி, ஜோதி ரவுடேலா 6E-904 விமானத்தில் சென்னைக்குச் சென்றுகொண்டிருந்தார். விமானத்தில் அவருக்கு ஜீஸ் மற்றும் சாண்ட்விச் வழங்கப்பட்டது. சாண்ட்விச்சை உட்கொண்ட அவர் உள்ளே ஒரு இரும்பு போல்ட் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லை... தங்கத்தை இருப்பு வைக்காத நாடுகள் எதெல்லாம் தெரியுமா?

Got a screw in my sandwich
byu/MacaroonIll3601 inbangalore

இதுபற்றி reddit தளத்தில் பதிவிட்டுள்ள ஜோதி, "சமீபத்தில் 01/02/24 அன்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இண்டிகோவில் பயணம் செய்தபோது எனது சாண்ட்விச்சில் ஒரு ஸ்க்ரூ கிடைத்தது. இதற்காக வருத்தம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் புகார் கூறினேன். ஆனால், விமானத்தில் வைத்து இதைப் பற்றிக் கூறாததால் இந்தப் புகாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிலளித்தனர்!" என்று கூளியுள்ளார்.

ஜோதி கூறிய புகாரை சக பயணிகள் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். சாண்ட்விச்சை அவர் கிட்டத்தட்ட சாப்பிட்டு முடித்துவிட்டதாகவும் நல்ல வேளையாக இறுதியில் உள்ளே போல்ட் இருப்பதைப் பார்த்தார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து இண்டிகோ நிறுவனம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ பதிலில், “இந்தப் பிரச்சினை குறித்து விமானத்திலேயே வைத்து புகார் தெரிவிக்கப்படவில்லை. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வருந்துகிறோம்” என்று கூறியுள்ளது.

ஒன்பிளஸ் 11R மொபைலுக்கு பெஸ்டு டீல்! ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இவ்ளோ கம்மியா கிடைக்காது!

click me!