ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையை நடத்தும் இந்த வேளையில், காங்கிகிரஸ் அரசுக்கு எதிராக பிரதமர் மோடி நடத்திய நியாய யாத்திரையை நினைவில் கொள்வது சுவாரஸ்யமானது
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில் ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்த நிலையில், பாரத் நியாய யாத்ரா நடைபயணமானது ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி நிறைவடைகிறது.
சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி முடிவெடுக்கும்: டி.கே.சிவக்குமார்!
ராகுல் காந்தி தனது நியாய யாத்திரையை நடத்தும் இந்த வேளையில், காங்கிகிரஸ் அரசுக்கு எதிராக பிரதமர் மோடி நடத்திய நியாய யாத்திரையை நினைவில் கொள்வது சுவாரஸ்யமானதாக இருக்கும். குஜராத் மாநிலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக 1987ஆம் ஆண்டில் நியாய யாத்ரா மற்றும் 1989ஆம் ஆண்டில் லோக் சக்தி யாத்ரா நடைபெற்றது. அந்த யாத்திரையை வெற்றிகரமாக நடத்தியதன் பின்னணியில் இருந்தவர் அப்போதைய குஜராத் மாநில பொதுச்செயலாளர் நரேந்திர மோடி.
இந்த இரண்டு யாத்திரைகளும் அடக்குமுறை மற்றும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சியின் கீழ் குஜராத் மக்களுக்கு நீதிக்கான தேடலில் ஒரு மையப் புள்ளியாக அமைந்ததாக பிரதமர் மோடிக்கு பாஜகவினர் புகழாரம் சூட்டுகின்றனர்.