கடவுள் ராமர் சர்ச்சை: தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது மேலும் 3 வழக்குகள் பதிவு!

கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


கடவுள் ராமர் அசைவம் சாப்பிடுபவர் என சரத் பவார் அணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல. சைவம் சாப்பிடுபவராக இருந்தால் அவர் 14 ஆண்டுகள் எப்படி காட்டில் வாழ்ந்திருப்பார் என கேள்வி எழுப்பினார். “ராமர் சைவ உணவு உண்பவர் அல்ல, அசைவ உணவு உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்.” எனவும் அவர் தெரிவித்தார்.

ஜிதேந்திர அவாத்தின் இந்த  கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்துக்கள், ராம பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான ஜிதேந்திர அவாத்துக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Latest Videos

அந்த வகையில், ஜிதேந்திர அவாத்துக்கு எதிராக புனே போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மேலும் 3 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மும்பையில் இரண்டு வழக்குகளும், தானே மாவட்டத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகியான கௌதம் ரவ்ரியா அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை எம்ஐடிசி காவல் நிலையத்தில் ஜிதேந்திர அவாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 (ஏ) (எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் அவர்களின் மத உணர்வுகளை சீண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

TNGIM2024 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வணிகத்திற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு: முகேஷ் அம்பானி புகழாரம்!

உள்ளூர் பாஜக எம்எல்ஏ ராம் கதம் அளித்த புகாரின் அடிப்படையில் காட்கோபர் காவல் நிலையத்திலும் இதே போன்ற குற்றச்சாட்டுகளின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் தொழிலதிபர் ஒருவரின் புகாரின் பேரில் இதே பிரிவின் கீழ் நவ்கர் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

click me!