அயோத்தியில் உஜ்வாலா திட்ட பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி..

Published : Dec 30, 2023, 02:37 PM IST
அயோத்தியில் உஜ்வாலா திட்ட பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி..

சுருக்கம்

அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி, உஜ்வாலா பயனாளியின் வீட்டிற்குச் சென்று அங்கு டீ அருந்தினார்.

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று அயோத்தி சென்றுள்ளள பிரதமர் நரேந்திர மோடி, அரசு திட்ட பயனாளியின் வீட்டுக்குச் சென்று அங்கு டீ குடித்தார். ஜனவரி 22 ஆம் தேதி ராம் கோயிலின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கு முன்னதாக, நகரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த வகையில் இன்று அயோத்திக்கு சென்ற அவர் உஜ்வாலா பயனாளியின் வீட்டிற்குச் சென்றார். அயோத்தியின் குறுகிய தெருக்களில் பிரதமர் மோடி நடந்து சென்றபோது ஏராளமானோர் அவரை வரவேற்றனர். ஒரு சிறுவன் காட்டிய ஓவியத்திலும் பிரதமர் கையெழுத்திட்டார்.

 

பின்னர் உஜ்வாலா பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்தினார். அவர் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் 10 கோடி பயனாளி என்பது குறிப்பிடத்தக்கது..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முன்னதாக பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் ரயில் நிலையம், புதிய வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் இன்று பிரதமர் மோடி அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைப்பதுடன், வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்..

இதனிடையே ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் பிரம்மாண்ட திறப்பு விழாவில் முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், 4,000க்கும் மேற்பட்ட துறவிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். கோயில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருவதால், அயோத்தி நகரம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. 

பிரதமரை வரவேற்கும் வகையில் மலர்கள், சுவரோவியங்கள் மற்றும் கருப்பொருள் அலங்கார நெடுவரிசைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய இடங்களில் மோடியின் படங்களுடன் கூடிய பிரமாண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன, புதுப்பிக்கப்பட்ட செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு வெளியே ராமரின் கட்-அவுட்கள் நிறுவப்பட்டுள்ளன.

அயோத்தில் பிரதமர் : 6 வந்தே பாரத், 2 அம்ரித் பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

முக்கிய நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தி விமான நிலையம் வரையிலான ராமர் பாதையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை வீதிகளில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டது.. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!