டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த ப.சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த ப.சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல அரசு இயந்திரங்களை டிஜிட்டல் முறையில் இந்திய நாடு இயக்கத் தொடங்கியது. ஒரு கையெழுத்திற்காக நான்கு ஐந்து அலுவலகங்கள் படியேறி அலைந்து திரிந்து 1 சான்றிதழ் வாங்கும் வழக்கம் எல்லாம் மாறி தற்போது இணையத்தில் விண்ணப்பம் போட்டுவிட்டு எந்த அலுவலரின் கையெழுத்துக்காக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு டிஜிட்டல் மயமாகி விட்டது. பண பரிவர்த்தனையிலும் எல்லாம் இணைய மயமாகிவிட்டது. கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு அதற்கு செல்போன் மூலம் பணம் செலுத்தும் பழக்கம் இந்தியர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடி... கர்நாடகா ஏடிஜிபி கைது!!
கூகுல் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்தி அனைத்து வித பண பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், கிராமங்களில் காய்கறிகள் வாங்கிவிட்டு அதற்கான 7 ரூபாய் 50 காசு பணத்திற்கு கிரெடிட் கார்டை நீட்டினால் அந்த வியாபாரி என்ன செய்வார். அவரிடம் கார்டை தேய்க்கும் இயந்திரம் இருக்குமா? அல்லது அங்கு மின்சார வசதி, இணைய வசதி தான் இருக்குமா? அனைத்து வியாபாரிகளும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கிராமங்களில் வியாபாரம் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: இது தான் சார் இந்தியா ... பாகிஸ்தான் ராணுவத்திற்கு மனிதநேயத்தை போதித்த BSF
டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்... பிரதமர் மோடி பதிலடி!! pic.twitter.com/FF7KYggN8r
— Asianetnews Tamil (@AsianetNewsTM)அப்படி இருக்கையில் அவர்கள் கார்டை தேய்க்கும் இயந்திரத்துடன் அலைய முடியுமா? இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை கிராம மக்களுக்கு எந்த வகையில் உதவும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, கிராமம் மற்றும் ஏழை மக்கள் எப்படி பரிவர்த்தனை செய்கிறார்கள்? அவர்கள் எப்படி ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்துவார்கள்? எப்படி டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வார்கள்? என ப.சிதம்பரம் பல கேள்விகளை கேட்டார். இதுக்குறித்த அவரது பேச்சை கேட்டால் அனைவருக்கும் சிரிப்புதான் வரும். கேட்பவர்கள் சிரிப்பார்கள். கிராமங்களில் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் படித்தவர்கள் தான் சிக்கலை சந்திப்பதோடு, இப்படி பேசி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.