காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம்... அறிவித்தார் பிரதமர் மோடி!!

By Narendran SFirst Published Mar 23, 2023, 12:40 AM IST
Highlights

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றி வந்த பூபதி (வயது 57), முருகன் (வயது 40), சசிகலா (வயது 35), தேவி (வயது 32), சுதர்சன் (வயது 31), வித்யா (வயது 30) மற்றும் மேலும் மூவர் உயிரிழந்தனர். இதை அடுத்து பட்டாசு ஆலையின் உரிமையாளரான நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரிட்டன் தூதரகத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கம்! இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி

மேலும் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோளில் 2.7 ஆக பதிவு!!

இந்த நிலையில், காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!