பிரிட்டன் தூதரகத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கம்! இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி

Published : Mar 22, 2023, 05:34 PM ISTUpdated : Mar 22, 2023, 05:47 PM IST
பிரிட்டன் தூதரகத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கம்! இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி

சுருக்கம்

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கான பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் காலிஸ்தானி தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கான இல்லம் ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த தடுப்புகள், பி.சி.ஆர். வேன்கள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புறப் பாதுகாப்பையும் இந்தியா நீக்கியுள்ளது.

காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடி அவமதிக்கப்பட்டிருக்கிறது.  தூதரகத்திற்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு பறந்துகொண்டிருந்த மூவர்ணக் கொடியை இறக்க முயற்சித்தனர்.

இதைத்தான் நீங்களும் சாப்பிடுறீங்களா? ஜாக்கிரதையா இருங்க! எச்சரிக்கும் ரசயான கலப்பட வீடியோ

இந்தச் சம்பவம் பற்றி விளக்கம் அளித்த லண்டன் காவல்துறை, காலிஸ்தான் ஆதரவாளர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது என்றும் இந்திய தேசியக் கொடி தற்போது தூதரகத்தில் கம்பீரமாகப் பறந்துகொண்டிருக்கிறது என்றும் சொன்னது.  இது போன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது என்று கண்டித்த பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பிற்கு பிரிட்டன் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை எதிர்த்து திங்கட்கிழமை சீக்கியர்கள் பலர் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனிடையே திங்கட்கிழமை அமெரிக்காவிலும் இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்காக இந்தியா அமெரிக்காவுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேர்மைக்கு கிடைத்த பரிசு! ரயில்வே கூலித் தொழிலாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு!

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ பயணிகளுக்கு ரூ.610 கோடி ரீஃபண்ட்! உன்னிப்பாக கண்காணிக்கும் மத்திய அரசு!
செய்த பாவத்திற்குப் பிராயச்சித்தம்.. திருப்பதி திருட்டு வழக்கில் ரவிக்குமார் வாக்குமூலம்!