உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் தனி இருக்கை உருவாக்கப்படும் என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் தனி இருக்கை உருவாக்கப்படும் என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்ககமும் நடத்தப்படுகிறது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான தொடர்புகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அறிவிஞர்கள் இடையே கல்வி சார் பரிமாற்றங்கள், ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
காசி சங்கமம் நிகழ்வுக்காக இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். pic.twitter.com/NmHfJryUGo
— PIB in Tamil Nadu (@pibchennai)இந்த நிகழ்ச்சியில் பல்துறை அறிஞர்கள் பங்கேற்கும் விதத்தில் தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணிக்க உள்ளனர்.
காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கா பிரதமர் மோடி இன்று வாரணாசிக்கு வருகை வந்துள்ளார். கடந்த 17ம் தேதி காசி தமிழ்சங்கமம் தொடங்கினாலும், முறைப்படி 19ம்தேதி(இன்று) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜா தொடக்க உரையும், உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வரவேற்புரையாற்றினர். இளையராஜாவின் இசைக் கச்சேரியும், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.
காசி சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான தொடர்பு உள்ளது. சங்கம் என்பது நம்முடைய நாட்டில் மிகப்பெரிய பங்களிப்பையும் செய்துள்ளது. நதிகள், அறிவு, சிந்தனைகள் அனைத்தும் சங்கத்தில் அடங்கும். இந்த சங்கமம் நிகழ்ச்சிதான், இந்தியாவில் உள்ள பல்வேறுபட்ட கலாச்சாரங்களின் கொண்டாட்டங்களாகும்.
தமிழகத்தின் புகழ்பெற்ற மகாகவி பாரதியார் காசி நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்தார். இங்குள்ள கல்லூரியில் படித்தார். காசி நகரில் பாரதியார் வாழ்ந்தபோதுதான் அவர் தன்னுடைய மீசையை முறுக்கப் பழகினார். தமிழகத்தின் புகழ்பெற்ற பாரதியார் பெயரில் பனாராஸ் பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை உருவாக்கப்படும்.
காசியைச் சேர்ந்த மக்களும், தமிழகத்தைச் சேர்ந்த மக்களும் சங்கமிக்கும் இந்த இடம் கங்கை, யமுனைப்போல் புனிதமானது. ஆன்மீக நகரம், கலாச்சாரத் தலைநகரம் காசி, தமிழகம் பழமையான வரலாறு இருக்கிறது.
காசி தமிழ் சங்கம நிகழ்வை பிரதமர் தொடங்கி வைத்தார். pic.twitter.com/pfDMYrF3lR
— PIB in Tamil Nadu (@pibchennai)இந்தியா தனது அமிர்த காலில் நுழையும் நேரத்தில் இந்த காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 1000 ஆண்டுகளாக கலாச்சார ஒற்றுமையை பின்பற்றி வரும் நாடு இந்தியா. காசி நகரம் உருவாக்கத்தில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாராஸ் பல்கலைக்கழகத்துக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். அங்கு துணைவேந்தராகவும் ராதாகிருஷ்ணன் இருந்துள்ளார்.
கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் மையங்களாக தமிழகமும், காசியும்எப்போதும் இருக்கும். இரு மண்டலங்களிலும் பழமையான மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் உள்ளன.
உலகின் பழமையான மொழிகள் அடங்கியிருக்கும் வீடு இந்தியா குறிப்பாக தமிழ் மொழி. தமிழ்மொழியின் பெருமையை இந்த நேரத்தில் நினைத்து பெருமைப்பட வேண்டும், அந்தமொழியை வலிமைப்படுத்த பணியாற்ற வேண்டும். உலகின் பழமையான மொழி தமிழ் என்பதை இந்த உலகிற்கு கூறும்போது, ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது.
காசியும், தமிழ்நாடும் இசை, இலக்கியங்கள், கலை ஆகியவற்றின் மூல இடங்கள். காசியில் தபேலாவும், தமிழகத்தில் தண்ணுமையும் புகழ்பெற்றவை. காசியில் பனாராஸ்பட்டுப் புடவை, தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை புகழ்பெற்றவை. இரு புடவைகளும் உலகம் முழுவதும் அறியக்கூடியவை
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்