பிரதமர் மோடிக்கும், கோட்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை... ராகுல்காந்தி ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Jan 30, 2020, 5:47 PM IST
Highlights

கேரள மாநிலம் வயநாட்டில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்;-  பிரதமர் மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தை நம்புவதாக கூறினார். கோட்சேவின் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவன் என சொல்லிக் கொள்ளும் தைரியம் மோடிக்கு இல்லை. அது ஒன்றை தவிர மோடிக்கும், கோட்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

பிரதமர் மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

கேரள மாநிலம் வயநாட்டில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணி நடைபெற்றது. இதில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்;-  பிரதமர் மோடியும், நாதுராம் கோட்சேவும் ஒரே சித்தாந்தத்தை நம்புவதாக கூறினார். கோட்சேவின் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவன் என சொல்லிக் கொள்ளும் தைரியம் மோடிக்கு இல்லை. அது ஒன்றை தவிர மோடிக்கும், கோட்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நன்றாக கவனித்து பாருங்கள், எப்போதெல்லாம் மோடியிடம் வேலைவாய்ப்பின்மை மற்றும் வேலைகள் குறித்து கேட்கும் போது அவர் உடனடியாக கவனத்தை திசைதிருப்பி விடுவார். என்ஆர்சி. சிஏஏ, ஆகியவை வேலைவாய்ப்பை பெற்றுதராது. காஷ்மீரில் உள்ள சூழலும், அசாம் பற்றி எரிவதும், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தராது. தான் இந்தியன் என்பதை நிரூபிக்க இந்தியர்களால் முடியும். நான் இந்தியனா இல்லையா என்பதை முடிவு செய்ய நரேந்திர மோடி யார்? யார் இந்தியன், யார் இந்தியன் இல்லை என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? நான் இந்தியன் என்பது எனக்கு தெரியும். அதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.

மேலும் பேசிய ராகுல் ஒவ்வொரு மனிதரும் தங்களது சொந்த நம்பிக்கையைப் பின்பற்றுவது பற்றிய மகாத்மா காந்தியின் கருத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவின் வலிமை என்னவென்று அவருக்கு தெரியாத அளவுக்கு அவர் மனம் கோபத்தால் நிறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

click me!