pm gifts auction: பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200 பரிசுப் பொருட்கள் 17ம்தேதி ஏலம்: என்னென்ன தெரியுமா?

By Pothy RajFirst Published Sep 16, 2022, 4:13 PM IST
Highlights

பிரதமர் மோடிக்கு பரிசாக அளி்க்கப்பட்ட 1,200 பொருட்கள் நாளை(17ம்தேதி) ஆன்-லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் அக்டோபர் 2ம் தேதிவரை நடக்கிறது.

பிரதமர் மோடிக்கு பரிசாக அளி்க்கப்பட்ட 1,200 பொருட்கள் நாளை(17ம்தேதி) ஆன்-லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் அக்டோபர் 2ம் தேதிவரை நடக்கிறது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதையடுத்து, இந்த ஏலம் நடக்கிறது. 

என்னென்ன பொருட்கள் ஏலம்

இதில் சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய சிறிய அளவிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை, அயோத்தியில் உருவாகும் ராமர் கோயிலின் மாதிரி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலையத்தின் மாதிரி, விநாயகர் சிலை, திரிசூலம் உள்ளிட்ட பல பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.

உலகின் 2-வது கோடீஸ்வரராக உயர்ந்தார் கெளதம் அதானி: ஃபோர்ப்ஸ் பட்டியல்

 மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வழங்கிய ராணி கமலாபதி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வழங்கிய அனுமன்சிலை, சூரியன் ஓவியம், இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் வழங்கிய திரிசூலம், என்சிபி தலைவர் அஜித் பவார் வழங்கிய மகாலட்சுமி சிலை,ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கிய திருப்பதி வெங்கடேஸ்வரர் புகைப்படம், அங்கவஸ்திரம், தலைப்பாகை, கத்திகள் உள்ளிட்டவை ஏலம் விடப்பட உள்ளன.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: 

சீன லோன் ஆப்ஸ்: பேடிஎம், ரேசர்பே செயலிகளின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி

கடவுள் விநாயகர் சிலை, ராமர் கோயில் மாதிரி, வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மாதிரி ஆகியவையும், பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட பல்வேறு பொருட்கள், நினைவுப்பரிசுகள் ஆகியவை ஏலம் விடப்படுகின்றன. சிற்பி யோகிராஜ் பிரதமர் மோடிக்காக வழங்கிய சிறிய நேதாஜி சிலையும் ஏலம் விடப்படுகிறது. 

விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் பிரதமர் மோடிக்கு பரிசுகள் வழங்கியுள்ளனர். அந்த நினைவுப்பரிசுகளும், ஏலம் விடப்படும். 24வகையான விளையாட்டுப்பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. 2022, காமென்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்கள், தாமஸ்கோப்பையில் வென்ற வீரர்கள் அளித்த பரிசுகள் இடம் பெற்றுள்ளன. 

பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் தங்கள் துறை சார்ந்த பொருட்களை பரிசாக பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளனர். அவை அனைத்தும் ஏலத்தில் இடம் பெறும். இந்த ஏலம், pmmementos.gov.in/என்ற இணையதள முகவரியில் நடக்கும், அக்டோபர் 2ம் தேதிஏலம் முடிவடையும்.

புற்றுநோய் மருந்து, ஆன்டிபயாடிக்ஸ் விலை குறையும்! அத்தியாவசிய பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு

ஏலத்தில் குறைந்தபட்சம் ஒரு பொருளின் விலை ரூ.100 ஆகவும், அதிகபட்சம் ரூ.10 லட்சமாகவும் நிர்ணயிக்கப்படும். 4வது ஆண்டாக பிரதமர் மோடி தனது பொருட்களை ஏலம் விடுகிறார். இந்த ஏலத்தில் இருந்து கிடைக்கும் நிதி அனைத்தும் கங்கையை தூய்மை செய்யும் திட்டத்துக்கும், மக்கள் நலப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் வழங்கிய பொருட்களான குத்துச்சண்டை கிளவுஸ், பாட்மிண்டன் ராக்கெட், ஆடைகள், ஈட்டிகள், டிஷர்ட் ஆகியவை தனியாக ஏலம் விடப்படும். 

இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்தார்

click me!