உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கான பிளான் ‘பி’ நடவடிக்கை தொடங்கியது
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 41 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, ஆக்சிஜன், தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம், சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் கிடைமட்ட துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கப்பாதையில் குழாய்களைச் செருகி மீட்பு பணிகள் நடைபெற்றன. இதற்கு அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியானது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், ஆகர் இயந்திரம் பொறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் தளம் திடீரென உடைந்தது. இதனால், பணி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அது சரிசெய்யப்பட்டு மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கின. ஆனால், ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உள்ளே சிக்கிக் கொண்டன. அவற்றை உடைத்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் எனது சேவையை பாராட்டியது மிகப்பெரிய அங்கீகாரம்: கோவை கூலி தொழிலாளி நெகிழ்ச்சி!
அதேசமயம், சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பிளான் ‘பி’ நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மலைக்கு மேல் இருந்து இயந்திரங்கள் உதவியுடன் துளையிட்டு மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. பிளான் ‘பி’ தொடங்கி சுமார் 5 மீட்டர் வரை துளையிட்டப்பட்டுள்ளது.
இதனிடையே 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு உடனடியாக மருத்து உதவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆம்புலன்ஸ்கல், மருத்துவர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது.