
சதாப்தி, ராஜ்தானி ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போன் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் டோமினோஸ் பீட்சா, மெக்டோனல்ட் பர்கர், கே.எப்.சி. சிக்கன்ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிடும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
ஒப்பந்தம்
இதற்காக ரெயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி. டோமினோஸ், மெக்டோனல்ட், கே.எப்.சி. பீட்சாஹட், ஒன்லி அலிபாபா, பிகானிர்வாலா, நிருலா, சுவிட்ஸ் புட்,ஹால்திகிராம் உள்ளிட்ட துரித உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பயணிகள் பலவகையான உணவுகள் தனியார் உணவகங்களில இருந்து வரவழைத்து சாப்பிடும் திட்டம், கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக பீகார் ராஜ்தானி, டெல்லி-மும்பை ராஜ்தானி,புனே-செகந்திராபாத் சதாப்தி, ஹவுரா-பூரிசதாப்தி ஆகிய ரெயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சதாப்தி, ராஜ்தானி
இந்நிலையில், நேற்று முதல், சதாப்தி, ராஜ்தானி ரெயிலில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இந்த ரெயிலில் பயணிக்கும் பயணிகள் செல்போன் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் உணவகங்களில் ஆர்டர் செய்து உணவுகளை வரவழைத்து சாப்பிடலாம். லூதியானா-டெல்லி சதாப்தி ரெயிலில் நேற்று முதல் திட்டம் முறைப்படி நடைமுறைக்கு வந்தது.
ஆன்-லைனில் எப்படி ஆர்டர் செய்வது?
ரெயிலில் பயணிக்கும் பயணிகள் இகேட்டரிங்.ஐ.ஆர்.சி.டி.சி. இணைதளத்தில் சென்று, தங்களுக்கு உணவு தேவைப்படும் ரெயில் நிலையம், பி.என்.ஆர். எண் ஆகியவற்றை குறிப்பட வேண்டும். எந்த உணவு நிறுவனத்தில் இருந்து, என்ன வகையான உணவுகள் தேவை என்பதை குறிப்பிட வேண்டும். அதன்பின்,செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் அனுப்பப்படும் அதை குறிப்பிட்டு அன்-லைனில் பணம் செலுத்தலாம் அல்லது உணவு டெலிவரி செய்யப்படும்போது பணம் செலுத்தலாம்.
செல்போன், எஸ்.எம்.எஸ்.
செல்போன் மூலம் 1323 என்ற எண்ணுக்கு அழைப்புச் செய்து, உணவுகளை ஆர்டர் செய்யலாம், எஸ்.எம்.எஸ். மூலம் 139 என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் மீல் என்றுடைப் செய்து ஆர்டர் செய்யலாம்.