நாளை முதல் ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்துக்கும் விலை மாறும்....

First Published Jun 15, 2017, 8:10 PM IST
Highlights
Daily Petrol Diesel Price Revision From Tomorrow Dealers Wont Go On Strike


பெட்ரோல் டீசல் தினசரி விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கும் மற்றொரு பெட்ரோல் நிலையத்துக்கும் இடையே கூட விலையில் ஏற்ற, இறக்கம் மாற்றம் இருக்கும் . இந்த விலை மாற்றம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம்கார்பரேஷன் ஆகியவற்றுக்கும் இடையே கூட விலை மாறுபடும். அதாவது குறைந்தபட்சம் 10 காசுகள் முதல் 15 காசுகள் வரை விலை மாறுபடலாம்.

உதாரணத்திற்கு ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையம் விற்பனை மையத்திற்கு அருகிலேயே இருந்தால் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரப்படி போக்குவரத்து செலவும் சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படும். விற்பனை மையத்துக்கு அருகே பெட்ரோல் நிலையம் இருந்தால் பெட்ரோல் விலை குறைவாக இருக்கும்.  மாறாக விற்பனை மையமும், எண்ணெய் நிரப்பும் மையமும் இருக்கும் தூரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை 5 முதல் 10 காசுகள் வரை மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

நாள்தோறும் தாக்கம்...

இதற்கு முன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலோ அல்லது உயர்ந்தாலோ மக்களுக்கு 15 நாட்களுக்கு பின்புதான் அதன்  பாதிப்பு, தாக்கம் தெரியும். ஆனால், இன்று முதல் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், உயர்ந்தாலும் மறுநாளே தாக்கல் தெரிந்துவிடும்.

 

click me!