pfi: pm modi: பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ அமைப்பு சதித்திட்டம்: அம்பலப்படுத்திய அமலாக்கப் பிரிவு

By Pothy Raj  |  First Published Sep 24, 2022, 1:24 PM IST

பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பாட்னா வந்த போது அவர் மீது தாக்குதல் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் பாட்னா வந்த போது அவர் மீது தாக்குதல் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி, பயிற்சி அளித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கடந்த வியாழக்கிழமை 11 மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு, என்ஐஏ அதிகாரிகள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

Tap to resize

Latest Videos

 இந்த சோதனையில் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர் சபீக் பயீத் என்பவரை கைது செய்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரிமாண்ட் நோட்டில் பல்வேறு குறிப்புகளை எழுதியுள்ளனர். 

அதில், கடந்த ஜூலை 12ம் தேதி பாட்னாவுக்கு பிரதமர் மோடி வருகை தர இருந்தார். அந்த நேரத்தில் அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சிப்பட்டறையும் அமைக்க திட்டமிட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில் வெடிகுண்டு வைத்து தகர்க்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பிஎப்ஐ அமைப்புக்கு ரூ.120 கோடிவரை  பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ரொக்கமாகக் கைமாறப்பட்டுள்ளன. இந்த பணத்தின் மூலம் நாட்டில் கலவரத்தைத் தூண்டுதல், தீவிரவாதத் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டது. 

பிரதமர் பதவிக்காக பாஜகவின் முதுகில் குத்திவிட்டார் நிதிஷ் குமார்: அமித் ஷா குமுறல்

வியாழக்கிழமை அமலாக்ககப்பிரிவு, ஏஎன்ஐ நடத்திய சோதனையில் அமலாக்கப்பிரிவு பிஎப்ஐ உறுப்பினர்கள் 3 பேரைக் கைது செய்தது.பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த பர்வேஸ் அகமது, இலியாஸ், மற்றும் அப்துல் முகீத் ஆகியோர் கைது செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் மூவரும் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

இதில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த சயீத் பயீத் கத்தாரில் இருந்தபோது, என்ஆர்ஐ கணக்கைப் பயன்படுத்தி ஏராளமான பணத்தை பிஎப்ஐ அமைப்புக்கு அனுப்பியுள்ளார். இந்த பணத்தின் மூலம் இந்தியாவில் பல்வேறு குழப்பங்களை விளைவிக்க பயன்படுத்த திட்டமிட்டிருந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளில் பிஎப்ஐ அமைப்புக்கு மட்டும் ரூ.120 கோடி வங்கியில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு

கடந்த ஆண்டு பயீத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டபோது, அந்தப்பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது.

குறிப்பிட்டஅளவு பணம் மட்டும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலு்  தெரியாத வங்கிக்கணக்குகளில் இருந்தும், சந்தேகத்துக்கு இடமான இடங்களில் இருந்தும் பிஎப்ஐ அமைப்புக்கு பரிமாறப்பட்டுள்ளது. இந்த பணம் முழுவுதம்சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 

குறிப்பாக 2020ம் ஆண்டு டெல்லி கலவரத்தை தூண்டிதல், ஹாத்ராஸுக்கு பிஎப்ஐ உறுப்பினர்களை அனுப்பி வைத்து வகுப்புவாதத்தை தூண்டிவிடுதல், கலவரம், தீவிரவாத்ததை பரப்புதல், பயங்கர ஆயுதங்களைக் கொள்முதல் செய்தல், வெடிபொருட்கள் சேகரித்தல் போன்றவற்றுக்கு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என அமாலக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

click me!