Venkaiah Naidu: pm modi: பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு

Published : Sep 24, 2022, 12:52 PM IST
Venkaiah Naidu: pm modi: பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு

சுருக்கம்

பிரதமர் மோடி அடிக்கடி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க்கட்சிகள் மத்தியில் மோடி குறித்து ஏதேனும் தவறான புரிதல்கள் ஏதேனும் இருந்தால் அதை தீர்க்க உதவும் என்று பிரதமர் மோடிக்கு குடியரசு முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி அடிக்கடி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க்கட்சிகள் மத்தியில் மோடி குறித்து ஏதேனும் தவறான புரிதல்கள் ஏதேனும் இருந்தால் அதை தீர்க்க உதவும் என்று பிரதமர் மோடிக்கு குடியரசு முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கள் அடங்கிய “ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விகாஸ்-பிரதமர் மோடி பேச்சுகள்(2019மே, 202 மே)” என்ற புத்தக வெளியிட்டு விழா நேற்று டெல்லியில் நடந்தது. 

அரசு, போலீஸ், விசாரணை அமைப்புகளைக் கண்டு மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: கபில் சிபல் கவலை
இதில்  குடியரசு முன்னாள் தலைவர் எம். வெங்கையா நாயுடு, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


அதில் வெங்கையா நாயுடு பேசியதாவது:


இந்தியா இப்போது ஒப்பற்ற சக்தியாக மாறிவிட்டது, உலக நாடுகளில் அதன் குரல் ஒலிக்கிறது. இந்த குறுகிய காலத்தில் இது சாதாரண விஷயமல்ல. 

மொபைல் போனுக்கு வரும் மோசடி அழைப்புகள், போலி எஸ்எம்எஸ்களில் இருந்து விரைவில் விடுதலை
இவை அனைத்தும் பிரதமர் மோடிதான் காரணம். மக்களுக்கு அவர் காட்டும் வழிகாட்டுதலும், தேசத்தின் வளர்ச்சியுமே காரணம். 


பிரதமரின் சாதனையைத் தவிர்த்து, சமூகத்தில் சிலதரப்பினரிடையே அவரின் செயல்பாடுகளால் சில அதிருப்தி நிலவுகிறது. அதற்கு காரணம் தவறான புரிதல்கள், சில அரசியல் கட்டாயத்தில் கூட இருக்கலாம். 

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது: நாராயண மூர்த்தி வேதனை
இந்த தவறான புரிதல்களையும் குறிப்பட்ட காலத்துக்குள் தீர்க் முடியும். அதற்கு பிரதமர் மோடி, அடிக்கடி அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களையும், எதிர்க்கட்சிகளையும் சந்திக்க வேண்டும், அரசியல் கட்சிகளும் திறந்த மனதுடன், மக்களின் உத்தரவை மதிக்க வேண்டும். 


எதிர்க்கட்சிகளும், போட்டியாளர்களும் எதிரிகள் அல்ல. அனைத்து கட்சிகளும் தத்தம் மதிப்பளிக்க வேண்டும்.பிரதமர், குடியரசுத் தலைவர், மாநில முதல்வர் அனைவருக்கும் பொதுவானர் அவர்களை அனைத்து கட்சிகளும் மதிக்க வேண்டும்.


எதிர்க்கட்சிகளும் திறந்த மனதுடன் அணுக வேண்டும். அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அரசியலில் உங்களுக்கு போட்டியாக இருப்பவர்கள் உங்கள் எதிரிகள் அல்ல. 


இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!