pfi:nia: குறிப்பிட்ட தலைவர்களுக்கு குறி! இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர்க்க பிஎப்ஐ முயற்சி: என்ஐஏ அறிக்கை

By Pothy Raj  |  First Published Sep 24, 2022, 2:58 PM IST

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்களில் மூலம், தேசத்துக்கு எதிரான அதிருப்தி சூழலை நாட்டில் உருவாக்கி, இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர் என தேசிய விசாரணை முகமை(என்ஐஏ) அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்களில் மூலம், தேசத்துக்கு எதிரான அதிருப்தி சூழலை நாட்டில் உருவாக்கி, இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர் என தேசிய விசாரணை முகமை(என்ஐஏ) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான தலைவர்களுக்கு எதிராக மோசமான அறிக்கைகளையும் தயாரித்து வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது என என்ஐஏ தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு

தீவிரவாத செயல்களுக்கு துணை செய்தல், நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, 11 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள், ஆதாரங்களை என்ஐஏ அமைப்பினர் கைப்பற்றினர். 11மாநிலங்களி்ல் இருந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்து ரிமாண்ட் அறி்க்கையைத் தாக்கல் செய்து 10 பேரை விசாரணைக் காவலில் எடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ அமைப்பு சதித்திட்டம்: அம்பலப்படுத்திய அமலாக்கப் பிரிவு

இந்த வழக்கில் 10 பேருக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணைக்காக காவலில் எடுக்கக் கோரியுள்ளோம். இவர்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, லஷ்கர் இ தொய்பா, மற்றும் சிரியா ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்களை சேர தூண்டிவிட்டனர். 

இ்ந்தியாவில் தீவிரமான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவமும் திட்டமிட்டனர். அரசுக்கும், அரசு அமைப்புகளுக்கும் எதிராக வெறுப்பை உருவாக்க, குறிப்பிட்ட மக்களுக்கான அரசின் கொள்கைகளை தவறாகச் சித்தரித்து, தேசத்துக்கு எதிராக வெறுப்பை உருவாக்க பிரச்சாரம் செய்தனர்.


இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் நடந்த விசாரணையில், இவை வெளிவந்தன. முதல்தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, சட்டவிரோத செயல்களில் மீண்டும், மீண்டும் ஈடுபட்டனர். பிற மதத்தினருக்கு எதிராக தீவிரவாத செயல்களிலும்,மக்கள் மத்தியில் அச்சத்தையும், பெரிய சதித்திட்டதையும் உருவாக்க திட்டமிட்டனர்.

கேரள கடைக்காரரின் துணிச்சல் ! பிஎப்ஐ அமைப்பு ஹர்தாலுக்கு எதிராக கடையைத் திறந்து வியாபாரம்
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்டசமூகத்தைச் சேர்ந்த பிரபலமான தலைவர்களை குறிவைப்பது தொடர்பாக கடுமையாக எழுதப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், அதோடு தொடர்புடையவர்களுக்கு எதிராகவும், இலக்கு வைத்தும் பிஎப்ஐ அமைப்பு செயல்பட்டுள்ளது. 


பிஎப்ஐ அமைப்பு, மக்களிடையே அமைதியைக் குலைத்து, மாற்று நீதிபரிபாலன முறையை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர தூண்டியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் திருவனந்தபுரம் பிஎப்ஐ அலுவலகங்களை தீவிரமாக ஆய்வு செய்யப்படுவது அவசியம். 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!