கேரள மாநிலத்தில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஹர்தால் போராட்டம் நடந்த போது, கடை உரிமையாளர் ஒருவர் துணிச்சலாக கடையைத் திறந்து, போராட்டக்காரர்களுக்கு எதிராக நின்றார்.
கேரள மாநிலத்தில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஹர்தால் போராட்டம் நடந்த போது, கடை உரிமையாளர் ஒருவர் துணிச்சலாக கடையைத் திறந்து, போராட்டக்காரர்களுக்கு எதிராக நின்றார்.
கேரளாவில் என்ஐஏ அமைப்பினர் நடத்திய சோதனையில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு எதிராக பிஎப்ஐ அமைப்பினர் கேரளாவில் நேற்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
பிஎப்ஐ ஹர்தாலுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு
இந்தக் கடையடைப்பு போராட்டத்தின்போது, பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன, பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைஉரிமையாளர்கள் கடையைத் திறந்து வைத்திருந்தால், கடையை மூடக்கோரி போராட்டக்கார்ரகள் மிரட்டல் விடுத்தனர், மூடாதவர்களின் கடைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து துவம்சம் செய்தனர்.
ஆனால், கண்ணூர் மாவட்டத்தில்ஒரு செல்போன் கடை உரிமையாளர் ஒருவர் பிஎப்ஐ போராட்டக்காரர்களுக்கு அச்சப்படாமல் கடையைத் திறந்து வியாபாரம் செய்தார். பிஎப்ஐ உறுப்பினர்கள் எச்சரித்தபோதும் கடையை மூடமுடியாது என எதிர்ப்புத் தெரிவித்தார்.
தலப்பரம்பா நகரைச் சேர்ந்தவர் ஆசாத். செல்போன் ரிப்பேர் கடை நடத்தி வருகிறார். பிஎப்ஐ அமைப்பு சார்பில் நேற்றுகடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிராக ஆசாத் கடையைத் திறந்தார்.
பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு
ஆசாத் கடையைத் திறந்து வைத்திருந்ததைப் பார்த்த பிஎப்ஐ உறுப்பினர்கள் அவரின் கடைக்குள் நுழைந்து கடையை மூடுமாறு எச்சரித்தனர். ஆனால், அதற்கு ஆசாத் கடையை மூடமுடியாது எனக் கூறி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொருட்களை கீழே தள்ளிவிட்டு சென்றனர். இவை அனைத்தையும் ஆசாத் வீடியோமூலம் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து ஆசாத் கூறுகையில் “ சட்டவிரோதமாக நடத்தப்படும் ஹர்தாலில் எனக்கு உடன்பாடில்லை. ஆதலால் கடையை திறந்து வைக்க முடிவுசெய்தேன். போராட்டக்காரர்கள் என்னிடம் வந்து பிரச்சினை செய்வார்கள் என்பதால், என்னுடைய மொபைலில் கேமிராவை ரெர்கார்ட் மோடில் வைத்திருந்தேன்.
பிஎப்ஐ நிர்வாகிகள் என்னிடம் வந்து வாக்குவாதம் செய்து, இன்றுஹர்தால் இருக்கிறது உனக்குத்தெரியுமா தெரியாதா எனக் கேட்டனர். ஹர்தாலில் கடையை திறக்கக்கூடாது என உனக்குத் தெரியாதா என்று கேட்டு மிரட்டி கடையை மூட எச்சரித்தனர்.
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பிஎப்ஐ அமைப்பு சதித்திட்டம்: அம்பலப்படுத்திய அமலாக்கப் பிரிவு
ஆனால் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். என்னால் கடையை மூட முடியாது. ஹர்தால் என்ற பெயரில் யாருடைய கடையை மூடச் சொல்ல யாருக்கும் உரிமைஇல்லை என்றேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எனக்கு மிரட்டல் விடுத்தனர், கடையின் மேஜையின் மீது இருந்த பொருட்களை தட்டிவிட்டு சென்றனர்.
அதன்பின் இந்த வீடியோவை உள்ளூர் போலீஸாரிடம் காண்பித்து புகார் அளித்தேன். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, எனக்கு மிரட்டல் விடுத்தவரை அடையாளம் கண்டனர்” எனத் தெரிவித்தார்
இது குறித்து போலீஸார் கூறுகையில் “ கடைஉரிமையாளருக்கு மிரட்டல் விடுத்தவரை அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் தலைமறைவாக உள்ளார். விரைவில் கைது செய்வோம்” எனத்தெரிவித்தனர்.