பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைப்பு – மத்திய அரசு உத்தரவு....

First Published Oct 3, 2017, 9:06 PM IST
Highlights
petrol diesel tax is decreased by central govenment


பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வந்தது.

ஆனால் கடந்த ஜூன் மாதம் முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் இதுவரை பெட்ரோலும், டீசலும் லிட்டருக்கு சுமார் பத்து ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.

எனவே இதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை நுகர்வோர் தரப்பில் நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைக்க மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

 

click me!