துடைப்பத்தை பிடித்தார் நடிகர் மோகன்லால் பிரதமர் மோடியின் தூய்மை சேவை இயக்கத்துக்கு ஆதரவு!

Asianet News Tamil  
Published : Oct 03, 2017, 08:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
துடைப்பத்தை பிடித்தார் நடிகர் மோகன்லால்  பிரதமர் மோடியின் தூய்மை சேவை இயக்கத்துக்கு ஆதரவு!

சுருக்கம்

Mohanlal picks up broom to support PM Modis Swachh Bharat Abhiyan

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா சேவை இயக்கத்தில் இணைந்த மலையாள நடிகர் மோகன்லால், காந்தி ஜெயந்தி அன்று துடைப்பத்தை பிடித்து பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அக்டோபர் 2-ந் தேதியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். இதன்படி, நாட்டையும், வாழும் பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் பிராசரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே 14 நாட்கள் “தூய்மை சேவை இயக்கத்தை” மத்திய அரசு சமீபத்தில் தொடங்கி அக்டோபர்2-ந்ேததி காந்தி ஜெயந்தி அன்று முடிக்க திட்டமிட்டு இருந்தது.

இந்த தூய்மை சேவை இயக்கத்துக்கு ஆதரவுஅளிக்க நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகைகள் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இதில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி தூய்மை சேவை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க கோரியிருந்தார். அந்த அழைப்பையும் நடிகர் மோகன்லால் ஏற்று பங்கேற்பதாக தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, காந்திஜெயந்தி நாளான அக்டோபர் 2-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள மார்டன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் மோகன்லால் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அந்த பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு முன்னதாக, காந்தி மண்டபத்துக்கு சென்ற நடிகர் மோகன்லால், அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் சுற்றுப்புறங்களை தூய்மையாக  பராமரிப்பது குறித்து நடிகர் மோகன்லால் தனது ரசிகர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அதன்பின் மாநில அளவிலான தூய்மை பிரசாரத்தை நடிகர் மோகன்லால் தொடங்கிவைத்து, பள்ளியின் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டார். கையில் துடைப்பத்தை பிடித்து பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளைக் கூட்டி மோகன்லால் சுத்தம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியை இந்திய மருத்துவ கழகம், கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் அமைப்பு, மோகன்லால் ரசிகர் மன்றம் ஆகியவை ஏற்பாடு செய்து இருந்தன.  

அதன்பின் நடிகர் மோகன்லால் நிருபர்களிடம் கூறுகையில், “ இது ஒருநாள் மட்டும் நிகழ்ச்சி அல்ல. இந்த தூய்மை இயக்கத்தை பல்வேறு வழிகளில் நாம் கொண்டு ெசல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அஜித் பவார் முதல் சஞ்சய் காந்தி வரை.. விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் விவரம்!
7 மாதங்களுக்கு முன் விஜய் ரூபானி, இப்போது அஜித் பவார்... விமான விபத்துகளில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்..!