பெட்ரோல், டீசல் நாள்தோறும் விலை மாற்றம் தொடரும்…. ‘டோர்டெலிவரி’ முறை எப்போது தொடங்கும்?- அமைச்சர் விளக்கம்

First Published Sep 4, 2017, 8:36 PM IST
Highlights
petrol diesel price ...minister dharmenra prathan explain


சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் தற்போது நாள்தோறும் செய்யப்பட்டு வரும் மாற்றம் தொடரும், நிறுத்தப்படாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கடந்த 2 மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.60 காசுகள் உயர்ந்துள்ளது, கடந்த 2014ம் ஆண்டுக்கு பின் உயர்ந்த மிக அதிகபட்சமாகும். இந்த விலை உயர்வால் அதிருப்தியில் மக்கள் இருந்தபோதும், நாள்தோறும் செய்யப்படும் மாற்றம் பின் வாங்கப்படாது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சராக (தனிப்பொறுப்பு) தர்மேந்திர பிரதான் இதுவரை இருந்து வந்தார். ஆனால், நேற்று செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் தர்மேந்திர பிரதானுக்கு கூடுதலாக திறன் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு அவர் கேபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.

இதையடுத்து, திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக நேற்று தர்மேந்திர பிரதான் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது நிருபர்கள் அவரிடம் பெட்ரோல், டீசலில் நாள்தோறும் செய்யப்படும் விலை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது-

சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப 
பெட்ரோல், டீசல் விலையில் நாள்தோறும் செய்யப்பட்டு வரும் மாற்றம் தொடரும். விலையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும், அது உடனடியாக நுகர்வோர்களுக்கு அளிக்கப்படும். ஏனென்றால், அதிகமான விலைமாற்றம் ஏற்படும்போது, பெரிய சுமை கொடுப்பதற்கு பதிலாக சிறிய அளவு மாற்றம் இருக்கும் போதே நுகர்வோருக்கு அளிக்கலாம்.

நாள்தோறும் செய்யப்படும் விலை மாற்றம் என்பது, நுகர்வோர்களின் நலனுக்காகச் செய்யப்படுவது. இதில் எந்த விதமான மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. தினந்தோறும் விலையில் மாற்றம் கொண்டுவரும் முறை சிறப்பானது. ஜூன் 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து, முதல் 14 நாட்களில் விலை குறைந்துதான் இருந்தது.

முன்பு போல் விலைமாற்றத்துக்காக 15 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. சர்வதேச விலையில் மாற்றம் ஏற்பட்டால், அடுத்தநாளே அது நுகர்வோருக்கு மாற்றம்படும். பெட்ரோலியில் ஏற்பட்டுள்ள விலைமாற்றம் சிறிது,சிறிதாக ஏற்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் ‘டோர் டெலிவரி’ எப்போது?

வீடுகளுக்கே சென்று எரிபொருள் விற்பனை செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்பு முகமைகளிடம் இருந்து ஒப்புதல் கேடடு இருக்கிறோம். சோதனை திட்டத்தை செயல்படுத்தும் முன் முன்அனுமதி பெறுவது அவசியம். அனுமதிக்காக முயற்சித்து வருகிறோம்

tags
click me!