பெட்ரோல், டீசல் விலை இன்று அதிரடி உயர்வு… பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 28 காசுகள் அதிகரிப்பு…

Asianet News Tamil  
Published : Jun 17, 2017, 06:42 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
பெட்ரோல், டீசல் விலை இன்று அதிரடி உயர்வு… பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 28 காசுகள் அதிகரிப்பு…

சுருக்கம்

petrol. diesel price hike

பெட்ரோல், டீசல் விலை இன்று அதிரடி உயர்வு… பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 28 காசுகள் அதிகரிப்பு…

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.76, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.23 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் நேற்யை விலையை விட 2 ரூபாய் 28 காசுகள் அதிகரித்துள்ளது. இதே போன்று டீசல் விலை 2 ரூபாய் 27 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை பன்னாட்டு சந்தைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி வந்தன.

பின்னர் 15 நாட்களுக்கு முறை பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மாற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நேற்று  முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்று பெட்ரோல் சிலை 65 ரூபாய் 48 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெட்ரோல் விலை 67 ரூபாய் 76 காசு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை நேற்று 54 ரூபாய் 96 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 57  ரூபாய் 23 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று  காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

 

 

PREV
click me!

Recommended Stories

சுதந்திரத்திற்க்குப் பின் 8 முதலமைச்சர்களை மட்டுமே கண்ட மாநிலம் எது தெரியுமா? அரசியல் நிலைத்தன்மை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.!
Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!