
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய கொடூரld தாக்குதலில் காவல் துணை ஆய்வாளர் உள்பட 6 பேர் பலியாகினர்.
என்கவுன்ட்டர்
ஜம்மு காஷ்மிரின் பிஜேபரா பகுதியில் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களை ராணுவத்தினர் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் அனைவரும் வீடு ஒன்றுக்குள் சென்று மறைந்து கொண்டனர்.
இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கி தோட்டாக்கள் திசை மாறிச் சென்றதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பழிக்குப் பழி
இருப்பினும், தீவிரவாதிகள் உடல்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. உயிரிழந்தவர்களில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஜூனைத் மத்தூவும் ஒருவர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் மத்தூ கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக தீவிரவாதிகள் அனந்த்நாக் மாவட்டம் அசாபல் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
கண்காணிப்பு தீவிரம்
கண்மூடித்தனமாக தீவிரவாதிகள் சுட்டதில் போலீஸ் எஸ்.ஐ. பெரோஸ் உள்பட மொத்தம் 6 போலீசார் உயிரிழந்தனர். இதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளே காரணம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு் உள்ளது