அமித்ஷாவுக்காக தயாரான ஆப்பிள் மாலை… ரத்தான நிகழ்ச்சியால் அப்பிளை பறித்து சென்ற பொதுமக்கள்… வீடியோ வைரல்!!

Published : Apr 21, 2023, 09:09 PM IST
அமித்ஷாவுக்காக தயாரான ஆப்பிள் மாலை… ரத்தான நிகழ்ச்சியால் அப்பிளை பறித்து சென்ற பொதுமக்கள்… வீடியோ வைரல்!!

சுருக்கம்

அமித்ஷாவின் ரோடு ஷா ரத்தானதால் அவருக்காக செய்யப்பட்டிருந்த ஆப்பிள் மாலையில் இருந்து ஆப்பிளை மக்கள் பறித்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமித்ஷாவின் ரோடு ஷா ரத்தானதால் அவருக்காக செய்யப்பட்டிருந்த ஆப்பிள் மாலையில் இருந்து ஆப்பிளை மக்கள் பறித்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக நிர்வாகிகள் கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: Karnataka Election 2023: நெருங்கும் கர்நாடக தேர்தல்; ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

இந்த நிலையில் இன்று பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தேவனஹள்ளி ரோடு ஷோவில் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக சாலை முழுவதும் அவரது பேனர்கள், கடவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அவரது ரோடு ஷோவுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் திடீரென அங்கு கனமழை பெய்தது.

இதையும் படிங்க: Karnataka Election 2023: கர்நாடகாவில் பிரதமர் மோடியா? ராகுல் காந்தியா? ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் சர்வே முடிவு

இந்த கனமழை காரணமாக அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அணிவிப்பதற்காக தாயார் செய்யப்பட்ட ஆப்பிள் மாலையை நேக்கி அங்கிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் படையெடுத்தனர். அடித்து பிடித்து மாலையில் இருந்த ஆப்பிளை அனவரும் பறித்து சென்றனர். இதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!