Karnataka Election 2023: கர்நாடகாவில் பிரதமர் மோடியா? ராகுல் காந்தியா? ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் சர்வே முடிவு

By Dhanalakshmi G  |  First Published Apr 21, 2023, 8:35 PM IST

இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய சட்டசபைத் தேர்தல்களும், 2024 மக்களவைத் தேர்தலும் பலரையும் வியப்பில் ஆழ்த்த இருக்கிறது. 
 


கன்னடம் மற்றும் ஆங்கிலம் டிஜிட்டல் வாசகர்களிடையே ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் தேர்தலுக்கு முந்தைய மெகா ஆன்லைன் சர்வே மேற்கொண்டது. இதில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் சர்வேயில் 3.5 மில்லியன் பயனர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 52 சதவீதம் பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் சர்வே:
ஆங்கில இணையத்தில் நடத்திய சர்வேயில் பசவராஜ் பொம்மை ஆட்சியில் திருப்தியில்லை என்று 42 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதேசமயம் இரட்டை இஞ்சின் ஆட்சியில் தங்களுக்கு திருப்தி இருக்கிறது என்று கன்னட இணையத்தில் நடத்திய சர்வேயில் 44 சதவீதம் மக்கள் தெரிவித்துள்ளனர். 

கன்னட இணையத்தில் பதில் அளித்தவர்களில் 35 சதவீதம் பேர் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கத்தால் ஏதோ ஒரு வகையில் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேசமயம் 52 சதவீத மக்கள் இரட்டை இஞ்சின் ஆட்சியில் திருப்தி என்று தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத சூழ்நிலையிலும், கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 44 சதவீதம் பேர் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை விரும்புகின்றனர். கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்கள் இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 41 சதவீதம் பேர், பாஜக-ஜேடிஎஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், 37 சதவீததம் பேர் கன்னடத்தில் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசு மாநிலத்திற்கு நல்லது என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவில் வாக்காளர்களை குறிவைக்காத ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் சர்வே அறிவியல்பூர்வமற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில், கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 48 சதவீதம் பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் அல்ல, பெரும்பாலும் வாக்காளர் அல்லாதவர்கள்.

Karnataka Election 2023: நெருங்கும் கர்நாடக தேர்தல்; ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

மோடியா? ராகுலா?

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பலத்த சவால் உள்ளது. மேலும், மாநிலத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இது ஒரு பரிசோதனை போல் அமைந்து இருக்கிறது. இந்தக் கட்சியின் வெற்றி அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கும். அதேசமயம் தோல்வி ஏற்பட்டால் அவருக்கு எதிர்ப்பு அலையை உருவாக்கலாம்.  

தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டு இருந்த பாரத் ஜோடோ யாத்திரை தங்களுக்கு மாநிலத்தில் ஆதரவைக் கொடுக்கும் என்று நம்புகின்றனர். ஆனாலும், ஏசியாநெட் டிஜிட்டல் சர்வேயின் முடிவுகள் வேறு மாதிரி இருக்கிறது. 

கன்னடத்தில் 69 சதவீதம் பேர், ஆங்கிலத்தில் 50 சதவீதம் பேர் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு ஒரு காரணியாக ராகுல் காந்தி இருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளனர். 

மாறாக, கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 58 சதவீதத்தினரும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 48 சதவீதத்தினரும் நரேந்திர மோடி பாஜகவின் வெற்றிக்கு காரணியாக இருப்பார் என்று தெரிவித்துள்ளனர். 

இடஒதுக்கீடு:

கர்நாடகாவில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினருக்கு புதிய இடஒதுக்கீடு முறையை உருவாக்குவது ஏதோ ஒரு வகையில் அம்மாநிலத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவும் என்று கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 75 சதவீம் பேரும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 58 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ஏசியாநெட் நியூஸ் நடத்திய டிஜிட்டல் கருத்துக்கணிப்பில் இந்த கணிப்பு வெளியாகி உள்ளது.. கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 21 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 22 சதவீதம் பேரும் மட்டுமே புதிய  இட ஒதுக்கீடு முறை தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவாது என்று நம்பியதும் கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 62 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 48 சதவீதம் பேரும் 4 சதவீத முஸ்லீம் ஒதுக்கீட்டை நீக்கி, லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகா  மக்களுக்கு சமமாக பகிர்ந்தளிப்பதில் கர்நாடக அரசின் சமீபத்திய இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவாக இருந்தனர்.

ஊழல்:

ஊழல் என்பது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. கர்நாடகாவும் அதற்கு விதிவிலக்கல்ல.  கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 46 சதவீதத்தினரும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 48 சதவீதத்தினரும்,  மாநில அரசாங்கத்தின் பதவிக்காலம் மிகவும் ஊழல் எந்த அரசாங்கம் வந்தாலும் ஊழல் குற்றங்கள் குறைவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

எனினும், கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 19 சதவீதம் பேர், முந்தைய எடியூரப்பா அரசாங்கம் மற்றும் அதற்கு முந்தைய ஹெச்.டி குமாரசாமி அரசாங்கத்தை விட தற்போதைய பசவராஜ் பொம்மை அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரம் ஆங்கிலத்தில் பதிலளித்தவர்கள் முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். ஹெச்.டி குமாரசாமி அரசாங்கம் தான் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை அரசாங்கத்தை விட ஊழல் நிறைந்தது என்று தெரிவித்துள்ளனர்.

Viral Video : மோடி என் கடவுள்... கொட்டும் மழையில் பிரதமரின் கட்அவுட்டை துடைக்கும் கிராமவாசி!

வளர்ச்சி:

கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 66 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 57 சதவீதம் பேரும் தற்போதைய பாஜக ஆட்சியில் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக நம்புகின்றனர். கன்னடத்தில் பதிலளித்தவர்களில் 14 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 25 சதவீதம் பேரும் மட்டுமே வளர்ச்சி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள்:

கன்னடத்தில் பதிலளித்தவர்களில்  45 சதவீதம் பேர்  பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பாஜக அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆதரவான அரசாங்கம் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே பாஜக அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில், சமூக-அரசியல் இயக்கவியல் பற்றிய மக்களின் கூர்மையான பார்வையை ஏசியாநெட் டிஜிட்டல் கருத்துக்கணிப்பு முடிவுகளை அளித்துள்ளது. எனினும் மக்களின் தீர்ப்பு என்ன என்பது மே 13 அன்றே தெரியவரும்.. எனவே கர்நாடகாவில் மக்களின் ஆதரவு எந்த கட்சிக்கு என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க தான் வேண்டும்..

click me!