Karnataka Election 2023: நெருங்கும் கர்நாடக தேர்தல்; ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

By Narendran S  |  First Published Apr 21, 2023, 8:35 PM IST

கர்நாடக தேர்தல் குறித்த பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் டிஜிட்டல் வாசகர்களிடையே ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் தேர்தலுக்கு முந்தைய மெகா ஆன்லைன் சர்வே மேற்கொண்டது. இதில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.


கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. 

குறிப்பாக பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஜேடிஎஸ் கட்சிக்கு பழைய மைசூர் பகுதியில் மட்டுமே செல்வாக்கு உள்ளதால் அவர்கள் அங்கு மட்டுமே வெற்றி பெற வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அனைத்தும் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதோடு பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தங்கள வேட்பாளர்களின் பட்டியலை பல்வேறு கட்டங்களாக வெளியிட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே கர்நாடக தேர்தல் குறித்த பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் டிஜிட்டல் வாசகர்களிடையே ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் தேர்தலுக்கு முந்தைய மெகா ஆன்லைன் சர்வே மேற்கொண்டது. இதில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: Karnataka Election 2023: கர்நாடகாவில் பிரதமர் மோடியா? ராகுல் காந்தியா? ஏசியாநெட் நியூஸ் டிஜிட்டல் சர்வே முடிவு

அதன் விவரம் பின்வருமாறு:

கன்னட டிஜிட்டல் வாசகர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு:

வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற ராகுல் காந்தி விவகாரம் உதவும் என்று நினைக்கிறீர்களா?

ஆம் – 10%
ஓரளவிற்கு ஆம் – 13%
இல்லை – 69%
சொல்ல முடியாது – 8%

இந்த இரட்டை எஞ்சின் அரசு கர்நாடகா வேகமாக முன்னேற உதவியிருக்கிறதா?

ஆம் – 52%
இல்லை – 29%
இருக்கலாம் – 14%
சொல்ல முடியாது – 5%

கர்நாடகாவில் பட்டியலினத்தவருக்கு புதிய இட ஒதுக்கீடு முறையை உருவாக்குவது தலித்களுக்கு உதவுமா?

ஆம் – 36%
ஓரளவிற்கு ஆம் – 22%
இல்லை – 22%
சொல்ல முடியாது – 21%

தற்போதைய ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

நல்ல முன்னேற்றம் உள்ளது – 36%
ஓரளவு முன்னேற்றம் உள்ளது – 31%
எதிர்மறையான முன்னேற்றம் உள்ளது – 14%
எதிர்மறையான அல்லது நேர்மறையான முன்னேற்றம் இல்லை – 14%
சொல்ல முடியாது – 5%

தற்போதைய கர்நாடக அரசில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சி – 32%
ஓரளவு மகிழ்ச்சி – 8%
திருப்திகரமானது – 21%
ஓரளவு மகிழ்ச்சியற்றது – 11%
மிகவும் மகிழ்ச்சியற்றது – 24%
சொல்ல முடியாது – 4%

வரவிருக்கும் தேர்தலில் பாஜக வெற்றிபெற பிரதமர் மோடி உதவுவார் என்று நினைக்கிறீர்களா?

ஆம் – 48%
ஓரளவிற்கு ஆம் – 11%
இல்லை – 38%
சொல்ல முடியாது – 4%

கர்நாடக அரசின் சமீபத்திய இடஒதுக்கீடு அரசியல் 4% முஸ்லீம் ஒதுக்கீட்டை நீக்கி, அதனை லிங்காயத்து மற்றும் ஒக்கலிகாவுக்கு சமமாக பங்கீடு செய்வது சரியானதா?

சரி – 62%
சரி இல்லை – 26%
சொல்ல முடியாது – 12%

தற்போதைய அரசு விவசாயிகளுக்கு உகந்ததா?

ஆம் – 45%
இல்லை – 32%
இருக்கலாம் – 18%
சொல்ல முடியாது – 5%

உங்கள் கருத்துப்படி எந்த ஆட்சியில் ஊழல் அதிகம்?

தற்போதைய பொம்மை ஆட்சியில் – 19%
முந்தைய எடியூரப்பா ஆட்சியில் – 17%
முந்தைய குமாரசாமி ஆட்சியில் – 18%
அனைத்து ஆட்சியிலும் – 46%

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கர்நாடகாவுக்கு எந்தக் கூட்டணி நல்லது?

பாஜக + ஜேடிஎஸ் – 44%
காங்கிரஸ் + ஜேடிஎஸ் – 20%
சொல்ல முடியாது – 35%

ஆங்கில டிஜிட்டல் வாசகர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு:

வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற ராகுல் காந்தி விவகாரம் உதவும் என்று நினைக்கிறீர்களா?

ஆம் – 31%
ஓரளவிற்கு ஆம் – 12%
இல்லை – 50%
சொல்ல முடியாது – 6%

இந்த இரட்டை எஞ்சின் அரசு கர்நாடகா வேகமாக முன்னேற உதவியிருக்கிறதா?

ஆம் – 44%
இல்லை – 39%
இருக்கலாம் – 10%
சொல்ல முடியாது – 7%

கர்நாடகாவில் பட்டியலினத்தவருக்கு புதிய இட ஒதுக்கீடு முறையை உருவாக்குவது தலித்களுக்கு உதவுமா?

ஆம் – 50%
ஓரளவிற்கு ஆம் – 25%
இல்லை – 21%
சொல்ல முடியாது – 3%

தற்போதைய ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

நல்ல முன்னேற்றம் உள்ளது – 36%
ஓரளவு முன்னேற்றம் உள்ளது – 21%
எதிர்மறையான முன்னேற்றம் உள்ளது – 25%
எதிர்மறையான அல்லது நேர்மறையான முன்னேற்றம் இல்லை – 9%
சொல்ல முடியாது – 8%

தற்போதைய கர்நாடக அரசில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சி – 29%
ஓரளவு மகிழ்ச்சி – 10%
திருப்திகரமானது – 15%
ஓரளவு மகிழ்ச்சியற்றது – 8%
மிகவும் மகிழ்ச்சியற்றது – 34%
சொல்ல முடியாது – 5%

வரவிருக்கும் தேர்தலில் பாஜக வெற்றிபெற பிரதமர் மோடி உதவுவார் என்று நினைக்கிறீர்களா?

ஆம் – 58%
ஓரளவிற்கு ஆம் – 17%
இல்லை – 21%
சொல்ல முடியாது – 3%

கர்நாடக அரசின் சமீபத்திய இடஒதுக்கீடு அரசியல் 4% முஸ்லீம் ஒதுக்கீட்டை நீக்கி, அதனை லிங்காயத்து மற்றும் ஒக்கலிகாவுக்கு சமமாக பங்கீடு செய்வது சரியானதா?

சரி – 48%
சரி இல்லை – 34%
சொல்ல முடியாது – 18%

தற்போதைய அரசு விவசாயிகளுக்கு உகந்ததா?

ஆம் – 39%
இல்லை – 42%
இருக்கலாம் – 11%
சொல்ல முடியாது – 8%

உங்கள் கருத்துப்படி எந்த ஆட்சியில் ஊழல் அதிகம்?

தற்போதைய பொம்மை ஆட்சியில் – 17%
முந்தைய எடியூரப்பா ஆட்சியில் – 16%
முந்தைய குமாரசாமி ஆட்சியில் – 19%
அனைத்து ஆட்சியிலும் – 48%

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கர்நாடகாவுக்கு எந்தக் கூட்டணி நல்லது?

பாஜக + ஜேடிஎஸ் – 37%
காங்கிரஸ் + ஜேடிஎஸ் – 42%
சொல்ல முடியாது – 22%

click me!