
காலநிலை மாற்றத்தின் காரணமாக பல இடங்களில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் பல இடங்களில் நில அதிர்வு அடிக்கடி உணரப்படுகிறது. கடந்த ஜனவரி 23 அன்று, சீனாவின் ஜின்ஜியாங்கில் 80 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி-என்சிஆர் முழுவதும் வலுவான நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகள் இன்று காலை ஏற்பட்டநிலநடுக்கத்தால் வீடுகள்அதிர்ந்தன. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், இந்திய நேரப்படி 05:36:55 மணிக்கு ஏற்பட்டது. இந்த திடீர் நில அதிர்வால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
புது டெல்லியில் பூமியின் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டிடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன. இதனிடையே டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில் தேவைப்பட்டால் உதவிக்கு 112 ஐ அழைக்குமாறு டெல்லி மக்களை வலியுறுத்தியது.
இதே போல டெல்லி முதலமைச்சர் அதிஷி அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன் என தமது எக்ஸ் பதிவிட்டுள்ளார். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தொடர்ந்து ஏற்படும் நில அதிர்விற்கு புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், பின்அதிர்வுகளுக்கு விழிப்புடன் இருக்கவும். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.