இளைஞரை கொடூரமாக தாக்கி, பலமுறை கத்தியால் குத்திய நபர்கள்.. மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ

Published : Jun 05, 2023, 06:20 PM ISTUpdated : Jun 05, 2023, 06:29 PM IST
இளைஞரை கொடூரமாக தாக்கி, பலமுறை கத்தியால் குத்திய நபர்கள்.. மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ

சுருக்கம்

டெல்லியில் இளைஞர் ஒருவரை 2 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கியதுடன், அவரை பலமுறை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகினறன. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் இளைஞர் ஒருவரை 2 பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கியதுடன், அவரை பலமுறை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் 2 பேர் சேர்ந்து ஒரு இளைஞரை தாக்குகின்றனர். மற்றொரு நபர் அவர் கத்தியால் பலமுறை குத்துகிறார். இந்த காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

 

இந்த கொடூர சம்பவம் இன்று காலை நடந்ததாகவும், பாதிக்கப்பட்ட இளைஞர் சச்சின் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் ஏன் அந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? தாக்குதல் நடத்தியது யார் போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

குட்டி பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

சில நாட்களுக்கு முன்பு, டெல்லியின் ஷஹபாத் பால் பண்ணை சுற்றுப்புறத்தில் நெரிசலான தெருவில் 16 வயது சிறுமி சாக்சி தனது காதலனால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்வலைகளை அடங்குவதற்குள் தற்போது டெல்லியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகன் இறந்த செய்தியை நம்பாமல் ஓடிவந்த தந்தை... பிணவறையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!