குட்டி பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Published : Jun 05, 2023, 05:24 PM ISTUpdated : Jun 05, 2023, 05:26 PM IST
குட்டி பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் மூன்று வயது சிறுவன் குட்டி பாம்பு ஒன்றை மென்று சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் மூன்று வயது சிறுவன் குட்டி பாம்பை மென்று சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் அந்த குட்டி பாம்பு இறந்துவிட்டது, சிறுவன உயிர்பிழைத்துவிட்டான். இச்சம்பவம் மாவட்டம் முகமதாபாத் பகுதியில் உள்ள மத்னாபூர் கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அலற ஆரம்பித்துள்ளான்.

உடனடியாக அச்சிறுவனனின் பாட்டி அங்கு சென்று பார்த்த போது, சிறுவனின் வாயில் இறந்து போன குட்டி பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவனின் வாயில் இருந்த குட்டி பாம்பை வெளியே எடுத்த அவர் இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

மகன் இறந்த செய்தியை நம்பாமல் ஓடிவந்த தந்தை... பிணவறையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இறந்த குட்டி பாம்பை ஒரு பாலிதீன் கவரில் வைத்து, குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றனர். 24 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், தற்போது சிறுவன் ஆபத்தான நிலையில் இல்லை என்று அறிவித்தனர்.

சிறுவனின் பாட்டி சுனிதா இதுகுறித்து பேசிய போது "நான் குட்டி பாம்பை வெளியே இழுத்து, அவனின் வாயை சுத்தம் செய்தேன். குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு டாக்டர் ராம் மனோகர் லோஹியா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்," என்று கூறினார்.

குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், முகமது சலீம் அன்சாரி, சிறுவனுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் "அந்த குட்டி பாம்பு விஷமற்ற இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் அந்த மருத்துவர் கூறினார்.

 

ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுமண தம்பதி.. நீண்ட நேரமாக திறக்காத கதவு.. இறுதியில் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.!

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!