‘ரிசர்வ் வங்கி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்’ ஆனந்த் சர்மா கடும் தாக்கு

First Published Dec 19, 2016, 11:21 AM IST
Highlights


பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு குறித்து பேரழிவு அறிவிப்புக்குப் பின், ரிசர்வ் வங்கி மீதும், வங்கி அமைப்பு மீதும் மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது என காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த்சர்மா கொச்சியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளின் புற வாசல் வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால், சாமானிய மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் இருந்து எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

 கடந்த 2008-09ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிதிச்சிக்கல், பொருளாதாரச் சிக்கலில் இந்திய வங்கிகள் நிலைத்தன்மையுடன் செயல்பட்டு, நம்பகத்தன்மையை காப்பாற்றியதால், நாட்டின் வங்கி முறையில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி மீது அளப்பரிய மரியாதை மக்களுக்கு இருந்தது.

ஆனால், இன்று, இந்திய வங்கிகள் மீதும், ரிசர்வ் வங்கி மீதும் மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது.

ஏன் என்ற கூறுகிறேன்?. மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சிறுசேமிப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள். அதை வங்கியில் செபாசிட் செய்துசேமிக்கிறார்கள். அதற்கு பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உத்தரவாதம் கிடைக்கிறது. எனக்கு தேவைப்படும் போது நான் சென்று எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், நான் கேட்கும் போது வங்கி பணம் கொடுக்க மறுக்கிறது. பணம் கையிருப்பு இல்லை, வர வேண்டியது இருக்கிறது என்று கூறுகிறது. ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன. ஆனால், புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் வங்கியின் புறவாசல் வழியாக போய்க்கொண்டு இருக்கிறது. பிறகு எப்படி மக்கள் வங்கியின் மீதும், ரிசர்வ் வங்கி மீதும் நம்பிக்கை ஏற்படும்? வங்கிகளும், ரிசர்வ்வங்கிகளும் இழந்த நம்பிக்கையைப் பெற நீண்ட நாட்களாகும்.

இவ்வாறு அவர் ெதரிவித்தார்.

 

ராகுலின் வார்த்தை சாதாரணமானது அல்ல

பிரமதர் மோடி மீது ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆனந்த் சர்மா கூறுகையில், “ பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் சாதாரணமானது அல்ல. அது தீவிரமானது. ஒரு சில விஷயங்கள் நாடாளுமன்றத்தின் தான்தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயம் விவாதிக்கப்பட வேண்டியது.

இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டால் பிரதமரோ அல்லது அமைச்சரோ தப்பிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியையும், எதிர்க்கட்சி எம்.பி.களையும் ஏன் ஆளும் கட்சியும், பிரதமர் மோடியும் பேசவிடவில்ைல என்பதை நாட்டு மக்களுக்கு கூற வேண்டும். பிரதமர் மோடி எதைப்பற்றியும் கவலைப்பட வில்லை என்றால் ராகுலை ஏன் பேச அனுமதிக்கவில்லை'' எனத் தெரிவித்தார்

click me!