மற்றொரு அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல்... நோட்டீஸ் அனுப்பியது பாட்னா நீதிமன்றம்!!

By Narendran SFirst Published Mar 31, 2023, 9:40 PM IST
Highlights

மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. 

மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. முன்னதாக மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவுல இயங்கும் இந்த ரயிலுக்கு டிக்கெட் தேவையில்லை.. 1 பைசா செலவில்லாமல் போய்ட்டு வரலாம்..!!

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. மோடிக் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பீகார் பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் ஏப்ரல் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பாட்னா நீதிமன்றம் ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சுஷில் குமார் மோடி கூறுகையில், பாட்னாவின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ராகுல்காந்தி தரப்பு அறிக்கையைப் பதிவு செய்யும் முன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

இதையும் படிங்க: 3 மடங்கு குறைவான செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டிய பாஜக... காங்.-ஐ சாடிய ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்!!

இந்த வழக்கில் என் தரப்பில் இருந்து, நான்கு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு பல சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன. இறுதி விசாரணைக்கு முன் சாட்சியங்கள் இருந்தால் அதை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இறுதி விசாரணையின் போது சரியான காரணமின்றி ஆஜராகவில்லை என்றால் அல்லது வேறு தேதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

click me!