விசா, பாஸ்போர்ட் எதுவும் இல்லாமலே வெளிநாட்டுப் பயணம்! இந்தியர்களை வரவேற்கும் நாடுகள்!!

By SG Balan  |  First Published Aug 24, 2024, 6:42 PM IST

இந்தியக் குடிமக்கள் அனைவரும் பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக ஆதார் கார்டை மட்டும் வைத்து, நேபாளம், பூடான் ஆகிய இரண்டு நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.


பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு இருப்பது பற்றித் தெரியுமா? உங்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம். நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமலே செல்லலாம்.

நேபாளம் மற்றும் பூட்டான் இரண்டும் இமயமலையை ஒட்டி இருக்கும் இயற்கை எழில் நிறைந்த நாடுகள். பாஸ்போர்ட் இல்லாமலே அயல்நாட்டு நிலக்காட்சிகள், கலாச்சாரங்கள், வரலாற ஆகியவற்றைத் தெரிய்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.

Latest Videos

undefined

இந்தியக் குடிமக்கள் அனைவரும் பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக ஆதார் கார்டை அல்லது இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு இந்த நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள்: ககன்யான் முதல் இந்திய விண்வெளி நிலையம் வரை!

நேபாளம்:

இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளம், அழகிய இமயமலை, பழங்கால கோயில்கள், மடாலயங்கள் மற்றும் எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றது. உலகெங்கும் இருந்து பயணிகள், சாகசக்காரர்கள் மற்றும் மலையேறுபவர்களுக்கு நேபாளத்தைத் தேடி வருகிறார்கள். இத்தனை சிறப்புகள் கொண்ட நேபாளம் இந்தியர்களுக்கு எளிதாகச் செல்லக்கூடிய சர்வதேச நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதுவும் பாஸ்போர்ட் இல்லாமலே!

பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற புகைப்பட அடையாள அட்டை ஒன்று இருந்தால் போதும். அன்னபூர்ணா மற்றும் எவரெஸ்ட் பகுதிகளில் மலையேற்றம், காத்மாண்டுவின் பழமையான கோயில்கள், போன்றவற்றுக்கு குறுகிய கால பயணம் மேற்கொள்ள இந்த பாஸ்போர்ட் இல்லாத பயணம் ஏற்றதாக இருக்கும்.

பூடான்:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் பூட்டான் ‘உலகின் மகிழ்ச்சியான நாடு’ என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டின் நிலப்பரப்புகள், கலாச்சாரம்  ஆகியவை மகிழ்ச்சிக்கான தனித்துவமான காரணங்கள் என்று கூறப்படுகிறது. பூடானிலும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாளச் சான்று ஒன்று போதும். ஆனால், நீண்ட காலம் தங்குவதற்கு, இந்திய குடிமக்கள் பூடான் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியை பூட்டான் சுற்றுலா கவுன்சில் மூலமாகவோ அல்லது பூட்டானுக்குள் நுழையும் இடங்களிலோ பெற்றுக்கொள்ளலாம்.

உலகிலேயே மிகப் பெரிய பசுமை ரயில்வே! மின்மயமாக்கப்பட்ட 68,000 கி.மீ. ரயில்பாதை!!

click me!