இந்திய இரயில்வே தனது பாதை வலையமைப்பில் 95 சதவீதத்தை மின்மயமாக்கி, உலகின் மிகப்பெரிய பசுமை ரயில்பாதையாக உருவெடுத்துள்ளது.
இந்திய இரயில்வே 68,000 கிமீ நீளமுள்ள ரயில்பாதையில் 95 சதவீதத்தை மின்மயமாக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பசுமை ரயில்பாதை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் முகுல் சரண் மாத்தூர் கூறுகையில், "ரயில்வே அமைப்பு தினமும் இரண்டு கோடி பயணிகளுக்கு சேவை செய்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக 5,000 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்தியாவின் ரயில் நவீனமயமாக்கல் முயற்சிகளில் வந்தே பாரத் ரயில்கள் ஒரு முதன்மாக உள்ளன" என எடுத்துரைத்தார்.
undefined
அசோசாம் (ASSOCHAM) தேசிய மாநாட்டில் பேசிய முகுல் சரண் மாத்தூர், 2023-24 நிதியாண்டில் ரயில்வே விரிவாக்கத்திற்காக இந்திய அரசு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். டிக்கெட்டை ரத்து செய்து பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை விரைவாக்கப்பட்டுள்ளது. அதற்கான நேரம் இப்போது ஒன்று அல்லது இரண்டு வேலை நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஜுஜூபி விலையில் ஜியோவின் புதிய பிளான்! ஏர்டெல் எல்லாம் கிட்டயே நெருங்க முடியாது!!
மாநாட்டில் பேசிய மற்ற வல்லுநர்கள், ரயில்வே நவீனமயமாக்கல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும் 2047 க்குள் விக்சித் பாரத் அல்லது வளர்ந்த இந்தியா இலக்கை அடைவதற்கான முன்னோக்கி ஒரு வழி என்றும் தெரிவித்தனர்.
அசோசாமைச் சேர்ந்த தீபக் சர்மா, ரயில்வேயை நவீனமயமாக்குவது இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையான 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) திட்டத்தின் பகுதியாகும் என்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய நிபுணர்கள், ரயில்வே நவீனமயமாக்கல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது என்றும், 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய துணைபுரியும் என்றும் தெரிவித்தனர்.
கோல்ட்ராட் ரிசர்ச் லேப்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் விஞ்ஞானி அனிமேஷ் குப்தா, தொழில்நுட்பம் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக ரயில்வேயில் உள்ள இடைவெளிகள் பற்றி விவாதித்தார். "ரயில் மூலம் 40 சதவீத சரக்கு போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டும். ரயில்வேயில் கொண்டுவரப்படும் டிஜிட்டல் தீர்வுகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். சைபர் கிரைம் அச்சுறுத்தல்களில் இருந்து காக்கும் உறுதி கொண்டதாகவும் இருக்க வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார்.