இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விரைவில் இலங்கைக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பைப் பெற உள்ளனர். அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அண்டை நாடான இலங்கை ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் வசிப்பவர்களுக்கு விசா இல்லாத அணுகலை அண்டை நாடு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்திய பயணிகள் விரைவில் இலங்கைக்கு விசா இல்லாமல் செல்லத் தொடங்குவார்கள். தற்போது 35 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல் வசதியை இலங்கை அறிவித்துள்ளது. அவற்றில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் அடங்கும். இந்த மாற்றம் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது 6 மாதங்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த மாற்றத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி பிடிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் முதலாம் தேதி முதல் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலங்கை செல்வதற்கு விசா தேவையில்லை. இந்த பாலிசி ஆறு மாதங்களுக்கு. சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைத் தவிர இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்த வசதியின் பலனைப் பெறப் போகும் நாடுகளாகும். மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் விசா இல்லாத அணுகலைப் பெற உள்ளனர்.
குடும்பங்களுக்கு ஏற்ற மாருதியின் புதிய 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு தெரியுமா?
இலங்கையின் பொருளாதாரத்திற்கு சுற்றுலா மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருகின்றனர். சில தினங்களுக்கு முன் இலங்கையில் விசா பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இலங்கையில் விசா-ஆன்-அரைவல் வசதி வெளிநாட்டு நிறுவனத்தால் கையாளப்பட்டது. இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் எந்தவித கட்டணமும் இன்றி சுற்றுலா விசா பெறுகின்றனர்.
கடன் வாங்கும் விதிகளை அதிரடியாக மாற்றிய ரிசர்வ் வங்கி.. என்ன தெரியுமா?