‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டிய வாக்குமூலத்தை நீக்கினேன்’ சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி, உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல்

Asianet News Tamil  
Published : Nov 15, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
‘பேரறிவாளனை விடுவிக்க வேண்டிய வாக்குமூலத்தை நீக்கினேன்’ சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி, உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல்

சுருக்கம்

Part of Perarivalan confession was omitted exCBI officer tells apex court

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 23 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் அன்று அளித்த வாக்குமூலத்தில் சில பகுதிகளை சிபிஐ நீக்கியதாக அவரை விசாரித்த சிபிஐ அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அந்த நீக்கப்பட்ட பகுதிகளில், இரண்டு 9 ஓல்ட் பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சி.பி.ஐ. முன்னாள் அதிகாரியான வி.தியாகராஜன் தானே முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

2 பேட்டரிகள்

“2 பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நான் பதிவு செய்யவில்லை.

இந்த வாக்குமூலம் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கக் கூடும் என்பதாலும் வாக்குமூலம் பதிவு செய்யும் நோக்கத்தையே இழந்து விடும் என்பதாலும் இது பதிவு செய்யத் தகுதி பெறாதது என்று முடிவெடுத்து நான் பதிவு செய்யவில்லை.

சதி பற்றி தெரியாது

மேலும் அந்தச் சமயத்தில் வெடிகுண்டு பற்றிய விசாரணையும் நிலுவையில் இருந்தது.

பேரறிவாளனின் பங்கு பற்றி சிபிஐ உறுதியாக இல்லை. சதி பற்றி இவருக்கு ஒன்றும் தெரியாது என்பது கொலை வழக்கு விசாரணை தொடர்ந்தபோது உறுதி செய்யப்பட்டது.

உண்மைதான்

இது பற்றி சிவராசன், எல்டிடிஇ முக்கிய தலைவர்களில் ஒருவரான பொட்டு அம்மானுக்கு ஒயர்லெஸ் செய்தி அனுப்பி இருந்தார். அந்த ஒயர்லெஸ் செய்தியில், தான், தனு, சுபா ஆகிய மூவர் தவிர கொலை சதி வேறு ஒருவருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பேரறிவாளன் எதற்காக 2 பேட்டரிகள் வாங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என்று கூறியது உண்மையானதுதான் என்று உறுதியானது.

விடுவிப்பை கருணையுடன்...

2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததன் செயலே கொலை சதியில் ஈடுபாடு கொண்டதாக ஆகாது. ஒயர்லெஸ் மெசேஜ் இதனை உறுதி செய்கிறது.

எனவே மரண தண்டனையிலிருந்து பேரறிவாளனுக்கு கருணை காட்டிய உச்ச நீதிமன்றம் நீண்டகாலமாக நிலுவயில் உள்ள அவரது விடுவிப்பையும் கருணையுடன் அணுக வேண்டும்.

நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று தானாகவே முன்வந்து தன்னால் நீக்கப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன்’’.

உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார்.

20 ஆண்டுகள் தனிமைச் சிறையில்

நேற்று நடந்த இந்த விசாரணையின்போது பேரறிவாளன் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் கூறும்போது, “வெடிகுண்டைத் தயாரித்த குற்றவாளி இலங்கை சிறையில் இருக்கிறார், இன்று வரை விசாரணை அதிகாரிகள் அவரை விசாரணையே செய்யவில்லை.

ஆனால் 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததற்காக அறியாச் சிறு வயதிலிருந்து ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச்சிறையில் வாடி வருகிறார். வெடி குண்டில் இந்த பேட்டரிகள்தான் பயன்படுத்தப்பட்டது என்பது கூட யூகம்தான்” என்றார்.

அவகாசம்

இதனையடுத்து, பேரறிவாளன் தண்டனைக் குறைப்பு குறித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஏற்கிறதா என்பதை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!