சேலம் உருக்காலை பங்குகளை விற்க முயற்சி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
சேலம் உருக்காலை பங்குகளை விற்க முயற்சி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி

சுருக்கம்

தமிழகத்தின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாநிலங்களைவையில் திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். 

மாநிலங்களவையில் இன்று சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தமிழகம் சார்பாக திமுகவின் திருச்சி சிவா பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துகுரியது. இந்த ஆலை ஒன்றும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல. தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்த ஆலையின் மூலம் நேரடியாக 2500 பணியாளர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். அதே போல் மறைமுகமாக    பலருக்கும் இந்த ஆலை வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. 

இவ்வாறு சிவா பேசினார். சிவாவின் இந்த பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜனும் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!