
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அவைக்கு வர வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இன்றும் 11-வது நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் ரூபாய் நோட்டு தொடர்பாக ஏற்பட்ட அமளியால் முதலில் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், மக்களவை கூடியதும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலைவ்யதால் சபாநாயகர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.