“வெறும் ரூ.500 செலவில் திருமணம் செய்த I.A.S.காதல் ஜோடிகள்” – ஆச்சர்யத்தில் மக்கள்

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
“வெறும் ரூ.500 செலவில் திருமணம் செய்த I.A.S.காதல் ஜோடிகள்” – ஆச்சர்யத்தில் மக்கள்

சுருக்கம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு  அறிவித்ததையடுத்து கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வெறும்500 ரூபாய் செலவில் ஐஏஎஸ் காதல் ஜோடி திருமணத்தை செய்துள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆசிஷ் வசிஷ்டா மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முசோரி.

இவர்கள் ஐஏஎஸ் தேர்விற்காக பயிற்சி பெற்றபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவர் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைதத்தை அடுத்து இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்

தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததையடுத்து நாட்டில் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருவதால். இவர்கள் எளிமையான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து இவர்கள் கடந்த திங்கள்கிழமையன்று,  வெறும் 500 ரூபாய் செலவில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த 500 ரூபாய் செலவு என்னவெனில் திருமண கட்டணமாக நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் தான் அது. இது தவிர்த்து உறவினர்களுக்காக வேறு எந்த செலவையும் செய்யவில்லை. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மணமக்களை மனதார வாழ்த்தி சென்றனர்.

ஐஏஎஸ் அதிகாரிகளே வெறும் 5௦௦ ரூபாய் செலவில் திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்தில் ஒரு தம்பதியினர் வெறும் 5௦௦ ரூபாய் செலவில் உறவினர்களுக்கு தேநீரும், தண்ணீரும் விருந்தாக கொடுத்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ