“ஆதிபகவன் பட பாணியில் கைவரிசை...!!” – போலி வருமான வரித்துறையினர் கைது

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
“ஆதிபகவன் பட பாணியில் கைவரிசை...!!”  – போலி வருமான வரித்துறையினர் கைது

சுருக்கம்

உத்தரபிரதேச மாநிலம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல் நாடகமாடி கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். 

உத்தரபிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில், மரச்சாமான்கள் விற்பனை செய்யப்படும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு திடீரென வந்த மர்மநபர்கள்தாங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறி கடையில் சோதனை செய்தனர்.

அப்போது, கணக்கில் வராத ஆவணங்கள் கடையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளனர்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய வியாபாரி, கைவசம் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த வியாபாரி அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்களில் இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்கள் உபயோகப்படுத்திய கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ