குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா... மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!

Published : Apr 07, 2022, 10:27 AM ISTUpdated : Apr 07, 2022, 10:29 AM IST
குற்றவியல் அடையாள விதிமுறை மசோதா... மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!

சுருக்கம்

சிறைக் கைதிகள் குற்றவாளிகளின் கருவிழி, ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்க அனுமதியளிக்கும் வகையிலான குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கியதையடுத்து அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 

குற்றவியல் அடையாள மசோதா

சிறைக் கைதிகள் குற்றவாளிகளின் கருவிழி, ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்க அனுமதியளிக்கும் வகையிலான குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன்படி, எந்தவொரு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்ட குற்றவாளி அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும், காவல் அதிகாரிகளுக்கு கை விரல், கால் தடம் போன்ற பதிவுகளை வழங்க வேண்டும். மேலும் சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் கருவிழி, ரத்தம் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்கவும் இந்த மசோதா அனுமதியளிக்கிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களவையில் கடந்த திங்கள் கிழமை நிறைவேற்றப்பட்டது. 

அமித்ஷா பேச்சு

இந்நிலையில், இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது, பேசிய அவர்;-  நாட்டின் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்தில் தொழில்நுட்ப வளா்ச்சிகளை உட்புகுத்தி விசாரணை நடைமுறையை வலுப்படுத்துவதும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை அதிகரிப்பதும்தான் குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவின் நோக்கம். எந்தவொரு தனிநபரின் தனியுரிமையையும் இந்த மசோதா சமரசம் செய்யாது. முறையான ஆய்வுக்குப் பிறகு சட்டத்தின் விதிகள் அறிவிக்கப்படும். 

முழுமையாகப் பாதுகாக்கப்படும்

தற்போது நடைமுறையில் உள்ள கைதிகள் அடையாளச் சட்டம், 1920 ஆங்கிலேயா்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இது நவீன காலத்துக்குப் போதுமானதாக இல்லை. தனிமனித உரிமையும், மனித உரிமைகளையும் மீறும் வகையில் எந்தவொரு குறைபாடுகளும் மசோதாவில் இடம்பெறாததை அரசு உறுதி செய்யும். உடல் மற்றும் உயிரியல் அடையாளங்கள் தொடர்பான தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றார். 

மசோதாவின் விதிகளை தவறாகப் பயன்படுத்தும் எண்ணம் எங்களிடம் இல்லை. அடுத்த தலைமுறை குற்றங்களை பழைய உத்திகளைக் கொண்டு சமாளிக்க முடியாது; குற்றவியல் நீதி அமைப்பை அடுத்த சகாப்தத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் என்றார். அளவீடுகளின் பதிவேடுகளை சேகரித்தல், சேமித்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் பதிவுகளை பகிர்தல், பரப்புதல், அழித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றுக்கு தேசிய குற்றப்பதிவு பணியகத்திற்கு அதிகாரம் அளிக்கவும் இது முயல்கிறது. எந்தவொரு நபரையும் அளவீடுகளை வழங்குவதற்கு இது ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?