
2017ம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையின்போது கேரள எம்பி இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எம்பி இ.அகமது இன்று காலை காலமானார்.
நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்பி மரணமைடைந்ததால், நாடாளுமன்ற மரபுபடி அவை அலுவல்கள் ஒருநாள் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். இதையொட்டி எம்பி அகமது மரணமடைந்ததால் பட்ஜெட் தாக்கல் செய்வது ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. எம்பி இ.அகமது மரணம் அடைந்ததால், பட்ஜெட் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து சபாநாயகர்தான் முடிவு செய்வார் என கூறினார்.