நாடு முழுவதும் இலவச வைபை வசதி : ஹாட்ஸ்பாட்களை அமைக்க மத்திய அரசு உத்தரவு

First Published Feb 1, 2017, 9:50 AM IST
Highlights


டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுக்க  இலவச வைபை ஹாட்ஸ்பாட் வழங்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.


அதன்படி 1050 கிராமங்களில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்களை கட்டமைக்க முடிவு செய்துள்ளது.  இந்த திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் துவங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கென இண்டர்நெட் வழங்க சிறப்பு டவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.

இதனை பயன்படுத்தி கிராம வாசிகள் தங்களது மொபைல் போன்களில் இண்டர்நெட் வசதியை பெற முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் வில்லேஜ் திட்டம் சுமார் 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள்மதிப்பில் துவங்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கிராமங்களிலும் டிஜிட்டல் முறையை அமல்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சிக்கு இந்த கிராமபுற இலவச வைபை வசதி மிகுந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

   

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து மத்திய அரசும் இலவச வைபை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!