வெளியுறவுத்துறையில் சிறந்து விளங்கிய இ.அஹமது

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
வெளியுறவுத்துறையில் சிறந்து விளங்கிய இ.அஹமது

சுருக்கம்

ஐந்து முறை கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இ. அஹ்மது  கேரளா மாநில தொழில் துறை அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளார்.


ஏழு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட  இ அஹ்மது  2004ல் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக பணியாற்றினார். 

சிறிது காலம் ரயில் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.


1991 முதல் 2014 வரை ஐ.நா அவையில் 10 முறை இந்தியாவின் பிரதிநிதியாக பங்குக் பெற்றவர்.  இ. அஹ்மது . முன்னாள் பிரதமர்  இந்திரா காந்தி  வளைகுடா (ஜிசிசி) நாடுகளுக்கு இவரை தனது சிறப்பு பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். 


இந்த வாய்ப்புகளையெல்லாம் சிறப்பான முறையில் பயன்படுத்தி பல்வேறு உலக நாடுகள் குறிப்பாக அரபு நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையான உறவுகள் மேம்பட இவர் திறம்பட பாடுபட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.


மறைந்த குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்களுக்கு பிறகு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக சிறப்பாக பணியாற்றி சிறுபான்மை மக்களின் நலனுக்காக சீரிய முறையில் பணியாற்றியவர் இ.அஹமது.

PREV
click me!

Recommended Stories

காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!
ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் வைத்து கூட்டு பலாத்காரம்! ரசித்த மற்றொரு பெண்.. CEO செய்த கொடூரம்