
கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த எம்பி இ.அஹமது திடீர் மரணமடைந்ததை அடுத்து இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினருமான இ.அஹமது இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சற்று முன்பு நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சையில் இருந்த ஈ.அஹமதுவை பார்க்க அவராது உறவினர்கள் கட்சிக்காரர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
இதனால் மருத்துவமனியில் இ.அஹமதுவின் உறவினர்கள் , கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவராது உடல் நிலை பற்றிய உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். தகவல் அறிந்து காங்கிரஸ் தலைவர் சோனியா , துணைத்தலைவர் ராஹுல் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
யாரையும் இ.அஹமதுவை பார்க்க மருத்துவமனி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அவரை தீவிர சிகிச்சையில் இருப்பது போல் காண்பிக்க முயற்சி எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தின் பேரில் அவரது உடல் நிலை உணமி நிலவரம் தெரிய வேண்டும் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவரது உறவினர்களை மட்டும் ஜன்னல் வழியாக பார்க்க மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுமதித்தனர். இந்நிலையில் இரவு 2-15 மணியளவில் இ.அஹமது மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாராளுமன்றத்தின் நடப்பு எம்.பி. மரணமடைந்தால் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவை ஒத்திவைக்கப்படுவது மரபு.
ஆனால் பட்ஜெட் தாக்கல் எனபது முக்கியமான நடைமுறை அதை தள்ளிப்போடுவதும் சிக்கல். அதற்கான நடைமுறை துவங்கி விட்ட நிலையில் இன்று ஒத்திவைக்கப்படுமா என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.
மாநில நிதித்துறை இணை அமைச்சம் சந்தோஷ் கங்வார் பட்ஜெட் தள்ளி வைக்கப்படுவது பற்றிய இறுதி முடிவை சபாநாயகரே தீர்மானிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா ? ஒத்திவைக்கப்படுமா? எனபதில் இருவேறு கருத்துகள் நிலவுகிறது.