
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா? பரபரப்பான சூழ்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்…
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந் பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில்குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை ஆற்றினார்.
இதனைர் தொடர்ந்து 2016 17 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
தொடர்ந்து ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தைநாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியாதாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2017-18 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைதாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்ககப்படுகிறது.-
அதன்படி தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகஉயத்தப்படும்..
வீட்டுக்கடன் தொகையை திரும்ப செலுத்துதல், வட்டி திரும்ப செலுத்துதல் ஆகியவற்றில் வரிக்கழிவு வழங்குவதற்கானஉச்சவரம்பு உயர்த்தப்படலாம்.
ரொக்க பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்கிற வகையில் பொதுமக்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படலாம். இதன்மூலம் வருமான வரித்துறையினரின்பணிச்சுமையும் குறையும்.
சேவை வரிவிகிதம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மூத்த குடிமக்கள், பெண்களுக்கு சலுகை தரும் அறிவிப்புகள் வெளியாகலாம்.
புதிய ரெயில்கள், பயணிகளுக்கான வசதிகள் அறிவிக்கப்படலாம். பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் சற்றேஉயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.