
1. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கான வருமானவரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைப்பு
2. ஆண்டுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை வருமானம் ஈட்டுபவர்கள் ஏற்கெனவே செலுத்தும் வருமான வரியான 30 சதவீதத்தோடு சேர்த்து, கூடுதலாக 10 சதவீதம் வரி சேர்க்கப்பட்டுள்ளது.
3. ஆண்டுக்கு ரூ. ஒரு கோடிக்கு மேலம் வருமானம் ஈட்டுபவர்கள் ஏற்கனவே செலுத்தும் 30 சதவீத வருமானவரியோடு சேர்த்து கூடுதலாக 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
4. ரூ. 3 லட்சத்துக்கு மேலம் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை தடை செய்யப்பட்டுள்ளது.
5. விற்றுமுதல் ரூ. 50 கோடி வரை இருக்கும் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதமாகக் குறைப்பு. இதன் மூலம் 96 சதவீத நிறுவனங்கள் பயன்பெறும்.
6. எல்.என்.ஜி. கியாஸ் சுங்க வரி 2.5 சதவீதமாகக் குறைப்பு
7. நிதிப்பற்றாக்குறை அடுத்த ஆண்டு 3.2 சதவீதமாக இருக்கும். 2018-19ம் நிதியாண்டில் 3 சதவீதமாகக் குறையும்.
8. அரசியல் கட்சிகள் தனி நபரிடம் இருந்து ரொக்கப்பணமாக ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெறத் தடை.
9. ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால், அதை காசோலை, மின்னணு பரிமாற்றம் மூலமே அரசியல் கட்சிகள் பெற வேண்டும்.
10. ஆதார் அடிப்படையிலான சுகாதார அட்டைகள் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும்.
11. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம்(எப்.ஐ.பி.பி.) கலைக்கப்படும்.
12. அன்னிய நேரடி முதலீட்டில் கூடுதலாக தளர்வு கொண்டு வரப்படும்.
13. டிஜிட்டல் பேமெண்ட்டை முறைப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, பேமெண்ட் ஒழுங்கு முறை வாரியம் உருவாக்கப்படும்.
14. ரூபாய் நோட்டு தடை என்பது துணிச்சலான நடவடிக்கை. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சிக்கும், வரிவருராய் வளர்ச்சிக்கும் இது உதவும்.
15. ரூபாய் நோட்டு தடையின் பாதிப்பு அடுத்த ஆண்டு நீடிக்காது.
16. அசையா சொத்துக்கள் மீதான நீண்ட கால முதலீட்டு ஆதாயம் பெறுவது 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாகக் குறைப்பு
17. அரசுப்பங்குகளை விற்கு அதன் மூலம் திரட்டப்படும் முதலீடு இலக்கு ரூ.56, 500 கோடியில் இருந்து ரூ. 72,500 கோடியாக அதிகரிப்பு
18. டிஜிட்டல் பேமென்ட்டை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஸ்வைப்பிங் மெஷின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
19. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வரி வலிக்கு
20. நேரடி வரிகள் வசூல் நிதியாண்டில் 15.8 சதவீதம் அதிகரிக்கும், மறைமுக வரிகள் 8.3 சதவீதம் உயரும்.
21. ஒட்டுமொத்த செலவு ரூ.21 .47 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
22. முதலீட்டுச் செலவு 24 சதவீதம் உயர்ந்துள்ளது.
23. சில்லரை பணவீக்கம் தொடர்ந்து 2 முதல் 6 சதவீதத்தில் உள்ளேயே கட்டுப்படுத்தப்படும்.
24. ஜார்கண்ட், குஜராத் மாநிலங்களில் புதிதாக எயிம்ஸ் மருத்துவமனை.
25. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு எப்போதும் இல்லாத வகையில் ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
26. வேளாண்துறை நடப்பு நிதியாண்டில் 4.1சதவீதம் வளர்ச்சி பெறும். அடுத்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு உயரும்.
27. விவசாயத்துறைக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்க இலக்கு.
28. பசல் பாமா யோஜனா திட்டத்தில் விவசாய நிலம் 40 சதவீதம் உயர்த்தப்படும்.
29. விவசாய நீர்பாசனத் திட்டத்துக்காக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
30.பால்வளத் துறையின் வளர்ச்சிக்காக ரூ. 2 ஆயிரம் கோடி உருவாக்கப்படும்.
31.குழந்தைகள், பெண்கள நலனுக்காக ரூ.1.87 லட்சம் கோடி ஒதுக்கீடு
32. சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு 2019ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
33. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு நிதி ரூ. 15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.23 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.
34. 2018ம் ஆண்டு மே மாதத்துக்குள் கிராமங்கள் அனைத்துக்கும் மின்சார வசதி இணைப்பு.
35. எஸ்.டி. பிரிவினரின் நலனுக்காக ரூ.31, 920 கோடி ஒதுக்கீடு.
36.சிறுபான்மையினரின் நலனுக்காக ரூ.4,195 கோடி ஒதுக்கீடு
37. சாலை, போக்குவரத்து துறைக்காக ரூ. 64 ஆயிரம் கோடி.
38. ரெயில், சாலை, கப்பல் ஆகிய துறைகளில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவும் , பொருளாதார வளர்ச்சியை தூண்டவும் ரூ.2.41 லட்சம் ஒதுக்கீடு.
39. புதிய மெட்ரோ ரெயில் திட்டக் கொள்கை உருவாக்கப்படும்.
40. பீம் ஆப்ஸ் மூலம் பணம் செலுத்துவோர்களுக்கும், வணிகர்களுக்கும் பரிசுகள்.
41. வணிகர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் முறை அறிமுகம்.
42. நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறைக்க முடிவு.
43. வங்கிகளின் மறுமுதலீட்டுக்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
44. ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை இருப்பவர்கள் வருமானம் வரி செலுத்த எளிய வகையில் ஒரு பக்கத்திலான படிவம் அறிமுகம்.
45. சிகரெட், புகையிலை வரி 12.5 சதவீதம் அதிகரிப்பு. பான்மசாலா கலால்வரி 9 சதவீதம் அதிகரிப்பு. புகையிலை வரி 8.3 சதவீதம் அதிகரிப்பு
46.சோலார் பேனல், செல் தயாரிக்கப்பன்படுத்தப்படும் சோலார் தகடுகளுக்கு முழுமையாக வரிவிலக்கு.
47. செல்போன்கள் தயாரிக்க பயன்படும் அச்சிடப்பட்ட சர்கியூட் போர்டுக்கு 2 சதவீதம் வரி.
48. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.44 லட்சம் கடன் வழங்க இலக்கு.
49. ஜி.எஸ்.டி. வரியை ஏப்ரல் 1-ந்தேதி நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி.
50. தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்