
இந்திய வங்கிகளில் 9000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை திருப்பிச் செலுத்தாமல்,லண்டன் தப்புயோடி விட்டார்.
லண்டனில் தலைமறைவாக உள்ள மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவரை இந்தியா கொண்டுவர முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள சில அம்சங்கள் மல்லையாவை மீண்டும் இந்தியாவிற்கே கொண்டுவந்துவிடும் என தோன்றுகிறது.
அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்க சட்ட திருத்தம் கொண்டுவரவுள்ளதாகவும், தேவைப்பட்டால் புது சட்டமே கொண்டுவரப்படும் என கூறினார்.
பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் விஜய் மல்லையாவுக்கு பெரிய ஆப்பாக அமைந்துள்ளது.