
சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் ஆனால் சாதாரண பட்ஜெடாக இருக்கிறது. ஒரு எதிர்ப்பார்ப்பு பணமதிப்பிழப்புக்கு பிறகு அதிரடியாக அறிவிப்புகள் எதாவது இருக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் இல்லை.
கிராம புறத்தை பற்றிய அறிவிப்புகள் உள்ளது. நீண்டகால பெரிய அளவிலான அறிவிப்புகள் மட்டுமே உள்ளது. சாதாரண மக்களுக்கு எதாவது கிடைக்கும் என்றால் என்றால் இல்லை. சராசரி மக்களுக்கு எதையும் தரவில்லை. சிறு தொழில் துறைக்கு வரியை 25% ஆக் குறைத்தது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகும். அது தவிர புதிதாக எந்த திட்டமும் , அறிவிப்பு எதுவும் இல்லை.
பெரிய அளவில் அதிரடி திட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இல்லை. பெரிய அளவில் திட்டத்தை போட்டுள்ளனர். இது சாதாரண விஷயம் தான். உடனடியாக திட்டங்களை அமல் படுத்துவது எதுவும் இல்லை.
நேரடியாக மாற்றம் இருக்கும் என எதிர்ப்பர்த்த திட்டங்கள் எதுவும் இல்லை.மறைமுகமாக ஆண்டுக்கணக்கில் பலன் தரக்கூடிய திட்டங்கள் மட்டுமே உள்ளது. சாதாரண மக்கள் எதிர்ப்பர்த்தது வருமான வரி வரம் உயர்த்தப்படும் என்று ஆனால் அதே அளவில் 2.5 லட்சம் மட்டுமே உள்ளது. ஆனால் 10% என்பதை பாதியாக குறைத்துள்ளனர். மற்றபடி சாதாரண மக்களுக்கு நேரடியாக உடனடி பலன் தரும் விஷயங்கள் குறைவுதான்.
ஆதார் எண்ணை , மின்மயமாக்கள் , கேஸ்லெஸ் கொண்டு வரணும் என்று நினைக்கின்றனர். டிமேப் ஒரு ஸ்கீம். மற்றொன்று ஆதார் கார்டு மூலம் பல பண செயல்பாடுகளை செயல்படுத்தணும் என்று நினைக்கின்றனர். ஆதார் கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்று நினைக்கின்றனர் அது வரவேற்க கூடியதுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.